Wednesday, April 13, 2011

விஜயை புகழும் அனன்யா


தற்பொழுது எல்லா இணையத்தளங்களையும் பார்த்த போது பெரும்பாலான தமிழ் இணையத்தளங்கள் விஜயுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார் என அனன்யா பேட்டி கொடுத்ததாக கூறிவருகின்றன.எந்தப்பேட்டியில் அனன்யா கூறினார் எனத்தெரியவில்லை அது தொடர்பான எந்த விடியோ இணைப்போ பேட்டி பற்றியோ இணைப்போ  தேடிப்பார்த்தால் கிடைக்கவில்லை.கடந்த மாதம் நடந்த பத்திரிகை சந்திப்பில் அன்னயா தமிழ் நடிகர்கள் ஒருவரும் தன்னுடன் கதைப்பதில்லை எனக்கூறினார் .இது தொடர்பாக மேலும் கூறும் போது சீடன் படத்தில் தனுசுடன் நடித்த போது முதல் நாள் தனுசை கண்டு உங்கள் குட்டி படம் பார்த்தன் நல்லா இருந்திது உங்க நடிப்பும் சுப்பர் எனக்கூறிய போது தாங்கஸ் என்று கூறிவிட்டு இருந்தார் .படக்காட்சியில் மட்டும் என்னுடன் கதைத்தார் ஏனைய நேரங்களில் என்னுடன் கதைப்பதில்லை என்றார் விஜய் பற்றி கூறும்போது விஜயும் நானும் இணைந்து ராம்கோபால் வர்மாவில் அசிஸ்டென் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளோம் இதனால் மகிழ்ச்சியடந்தேன் இப்படம் தமிழ் ஹிந்தியில் வருகிறது ஹிந்தியில் மாதவன் ஜோடி என்றார்.விஜய் கேரளாவுக்கு விருது வாங்க வந்திருந்தார் அவரை கண்ட சந்தோசத்தில் அவரிடம் சென்று விஜய் சேர் நான் உங்களுடன் சேர்ந்து படம் பண்ண உள்ளேன் எனக்கூறினேன்.அவரும் ஓகே தாங்ஸ் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் என்றார்.ஏன் தமிழ் ஹீரோ ஒருவரும் என்னுடன் கதைக்கவில்லை நானும் நல்ல பொண்ணு தான் சொல்லுங்க எனக்கூறினார்.இதனையும் எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன ஆனால் இப்போது விஜய் படம் என்றால் பாடலிலாவது கவர்ச்சி காட்ட வேண்டும் அதனால் விஜய் படத்தில் நடிக்கவில்லை என அனன்யா கூறியதாக கூறுகின்றன.விஜய் பற்றி ஏன் இப்படி வதந்தி கிளப்பிறார்களோ தெரியவில்லை.கில்லி காதலுக்கு மரியாதை பூவே உனக்காக லவ் ருடே காவலன் கண்ணுக்குள் நிலவு படங்களில்  எங்கே ஹீரோயின் கவர்ச்சி காட்டினார்கள் என்பது இணையத்தளங்களுக்கு தெரியவில்லை போல் உள்ளது.விஜய் பற்றி அனன்யா கூறியது இந்த  லிங்கில் உள்ளது அதனையும் பாருங்கள்.
http://kishor-vimal.blogspot.com/2011/02/blog-post_9206.html
இது பெப்ரவரி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment