Saturday, April 16, 2011

நண்பன் பட புதிய திருப்பம்



விஜய் நடிக்கும் நண்பன் படத்திற்காக புதிய ஒரு குழந்தை உருவாக்கப்பட்டு வருவதாக நண்பன் பட யூனிட் கூறுகிறது.இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படத்தின் கிளைமக்ஸ் காட்சியில் இலியானாவின்  அக்காவிற்கு பிரசவம் பார்பது போல் ஒரு காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.அதற்காக பிளாஸ்டிக்காலான ஒரு பொம்மை குழந்தை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.அந்த பொம்மையை பார்த்தால் அது உண்மையான குழந்தை போல் காணப்படுவதாக கூறி பரவசமூட்டுகின்றனர் நண்பன் பட யூனிட்.இதனை உருவாக்கியவர் ஷன்கான் என்பவர் ஆவார்.சமீப காலமாக இந்திய சினிமாவையே கலக்கிய எந்திரன் படத்துக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் சாபு சிறில் இவர் எந்திரனையே உருவாக்கியவர் இப்பொழுது குழந்தையை உருவாக்கியுள்ளார்.இந்தப்படத்தில் இறுதிக்காட்சியில் விஜய் தாடி வைத்து தோன்ற உள்ளார்.இவ்வாறு கலை கட்டுகிறது நண்பன் யூனிட்.

0 comments:

Post a Comment