நடிகர் விக்ரம் ஐ.நா.சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் பிரிவு தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார்.
அவர் விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூகசேவை பணிகள் செய்து வருவதாகவும், மேலும் இவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு இருப்பதாகவும் விக்ரம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மரக்கன்றுகள் நடுவதற்காக பச்சைப்புரட்சி என்ற அமைப்பை துவங்கி உள்ளேன். குடிசைப் பகுதி மக்களுக்கு கல்வி அறிவூட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படும். நில உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தரும் காலி நிலங்கள், மற்றும் சாலை விரிவாக்கத்தில் சிக்காத பகுதிகளில் மரக்கன்று நடுவோம்.
இந்த திட்டத்தில் என் ரசிகர்களோடு வேறு நடிகர்களின் ரசிகர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக விஜய், அஜீத், சூர்யா போன்றோரிடம் இதுகுறித்து பேசுவேன். அவர்களையும் எனது பணியில் இணைத்துக் கொண்டு செயல்படுவேன். பிற மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
0 comments:
Post a Comment