Saturday, April 2, 2011

விஜயும் தெலுங்கு திரையுலகமும்

தமிழில் சூப்பர் கிட்டான திரைப்படம் வேட்டைக்காரன்.தெலுங்கில் புலிவேட்டை என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.இத்திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தில் விஜய் அனுஸ்கா சிறீகரி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் தெலுங்கில்  வசூலில் 5 நாள் வரை 181934 பணத்தை சம்பாதித்துள்ளது.இப்படத்தின் வசூல் மேலும் தொடர்கிறது.29.03.2011 அன்று முதலாவது காட்சி 2 வது காட்சி வசூல் இன்னும் பதிவு செய்யாமல் 181934 ரூபாவை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனையடுத்து விஜய் நடித்து தமிழில் வெளிவந்த வில்லு திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.இதன் பாடல்கள் வெளியாகி கிட் ஆகியுள்ளது.இப்படத்தை தொடர்ந்து வில்லு திரைப்படமும் விரைவில் தெலுங்கில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்து விஜய் நடித்து வரும் நண்பன் படமும் பொன்னியின் செல்வன் படமும் தெலுங்கில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
விஜயின் நடிப்பில் வெளியாகி கிட்டான காவலன் திரைப்படம் தெலுங்கில் வெங்கடேஸ் அனுஸ்கா நடிப்பில் வெளியாக உள்லமை குறிப்பிடதக்கதாகும்.இதனால் காவலன் தெலுங்கில் டப் செய்யப்படாது.

0 comments:

Post a Comment