Thursday, April 28, 2011

போஸ்டர் ஒட்டிய விஜய் சேலம் ரசிகர் மன்றத்தினருக்கு அபராதம்

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலின்போது சுவர் விளம்பரம், கட்-அவுட்டுக்கள், பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி சேலம் மாநகர போலீசார் தி.மு.க. , அ.தி.மு.க., மற்றும் பல்வேறு கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இப்போது இவர்கள் கோர்ட்டுகளுக்கு சென்று அபராதம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற துணைதலைவரும், கொண்டலாம்பட்டி வட்ட பாக செயலாளருமான பால்மார்க்கெட் சந்திரன், அ.தி.மு.கவிற்கு ஓட்டு கேட்டு கட்அவுட் வைத்து இருந்தார். இதற்காக அவர் சேலம் கோர்ட்டில் ரூ.1500 அபராதம் கட்டினார்.

இவரைப்போல் சேலம் கிச்சிப்பாளையம் இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் கிச்சிப்பாளையம் பெரியசாமியும், சேலம் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற் சங்கத்தை சேர்ந்த நல்லாட்சி என்பவரும் ரூ.1500-ம் அபராதம் கட்டினர்.

சேலத்தில் தேர்தலின்போது விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலரும்போஸ்டர் ஒட்டி இருந்தனர். இதனால் குகை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த லோகேஸ்வரன், சங்கர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

இதனால் இவர்களும் சேலம் கோர்ட்டில் தலா ரூ.1500 அபராதம் கட்டினர். இவர்களைப்போல் நேற்று மட்டும் ஏராளமானோர் கோர்ட்டில் அபராதம் கட்டினர்.

0 comments:

Post a Comment