Thursday, April 7, 2011

வேலாயுதம் பட எதிர்பார்ப்புக்கு காரணங்கள்



விஜய் படம் என்றாலே ரசிகர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.அந்த எதிர்பார்ப்பு இப்படத்திற்கும் இருக்கிறது.மிகப்பெரிய ஓப்பினிங் விஜய் படத்துக்கு கிடைப்பதால் இப்படத்திற்கும் அவ் எதிர்பார்ப்பு இருக்கிறது.அத்துடன் விஜயின் இறுதியாக வந்த காவலன் வெற்றி பெற்றதால் அடுத்த படமாக வெளியாகும் வேலாயுதம் படம் விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்பு காணப்படுகிறது.
ஜெயம் எம் குமரன் சன் ஒப் மகாலக்சுமி உனக்கும் எனக்கும் சந்தோஸ்சுப்ரமணியம் தில்லாலங்கடி ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய ரீமேக் கிங் என அழைக்கப்படும் ஜெயம் ராஜாவின் ஆறாவது படமாக அமைவதாலும் இப்படம் எதிர்பார்ப்புடன் உள்ளது.வித்தியாசமான சூப்பர் ஹீரோ கதை அம்சத்துடன் கூடிய படமாக அமைவதும் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் ஏற்கனவே தெலுங்கில் வெற்றி பெற்ற அஸாத் படத்தின் தழுவல் எனினும் ராஜாவின் திரைக்கதை மாறுபட்டிருப்பதால் படத்திற்குரிய எதிர்பார்ப்பு மிக மிக அதிகம்.

மிகபிரமாண்ட தயாரிப்பாளர் அஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரனின் விளம்பர உத்தி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.ஏற்கனவே விஜயின் காதலுக்கு மரியாதை எனும் மெகா கிட் படத்தை வெளியிட்ட ரவி தனது நிறுவனம் சார்பாக இப்ப்டத்தை தயாரிக்கிறார்.தசாவதாரம் எனும் பிரமாண்ட படத்தை கொடுத்த ரவி இப்படத்தை மேலும் பிரமாண்டமாக கொடுப்பார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இவரது விளம்பர உத்தியும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆகும்.

விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யா சந்தானம் சத்தியன் கூட்டணி குடும்ப ரசிகர்களுக்கு பிளஸ்.குடும்பபங்கான அனைவரும் பார்கும் படமாக அமையும் படம் என எதிர்பார்க்கலாம்.விஜய் அன்ட்னையின் இசை படத்தின் இன்னொரு ஸ்பெசல் ஏற்கனவே வேட்டைக்காரனில் இணைந்த  விஜய் அன்டனி இப்படத்தில் இரண்டாவது முறை இணைகிறார்.இவரது இசை மிகப்பெரிய ஸ்பெஸல்.மாசிலாமணி காதலில் விழுந்தேன் நினைத்தாலே இனிக்கும் சுக்ரன் டிஸ்யூம் என பல வெற்றி பாடல்களை தந்தவர் எனபது குறிப்பிடத்தக்கதாகும்.
சுபாவின் வசனம் சிவாவின் சண்டைப்பயிற்சி மிலனின் கலையும் ப்ரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ் இவ்வாறு வெற்றிக்கூட்டணி பல சேர்ந்து படத்தை வெளியிடுவது வேலாயுதம் பட எதிர்பார்ப்புக்குரிய காரணங்களாகும்.

0 comments:

Post a Comment