Sunday, April 10, 2011

நண்பன் பட எடிட்டருக்கு குட் பை சொன்ன ஷங்கர்


சமீபத்தில் நடந்த தெய்வத்திருமகன் தலைப்பு அறிமுக விழாவில்  எடிட்டர் ஆன்ட்டனியை புகழ்தள்ளினார்கள். படத்தின் ஹீரோ விக்ரம் ஒருபடி அதிகமாவே புகழ்ந்தார். “ இந்தியாவிலேயே சிறந்த எடிட்டர் ஆண்டனிதான்” என்றார்.
இப்படி ஆள் ஆளுக்கு புகழ்ந்து தள்ளுவதில் தலைகால் புரியாமல் திரியும் ஆண்டனியை மதித்து, நண்பன் படத்திற்காக நான் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னாராம் இயக்குனர் ஷங்கர். ஆனால் “ ஐ யம் பிஸி ஷங்கர்” என்று சொன்னவரை ஒருமாதம் கழித்து இரண்டாவது முறையாக சந்திக்க அழைத்தாராம். ஆனால் மறுபடியும் வேலையிருப்பதாக சொல்லி விட்டாராம் ஆன்டனி.முடிந்தவரை பொறுமையாக இருக்கும் ஷங்கர், ஆண்டனியின் அடாவடித்தனத்தைப் பார்த்து பொறுக்க முடியாமல் இப்போது நண்பன் படத்தில் இருந்து அவரைத் தூக்கிவிட்டராம். ஏன் இப்படி ஷங்கரிடம் நடந்து கொண்டீர்கள் என்று அன்டனியின் நண்பர்கள் கேட்டதற்கு, நண்பனுக்கு ஒதுக்கும் நேரத்தில் நான் நான்கு படங்களுக்கு எடிட் செய்து முடித்து விடுவேன் என்றாராம் அண்டனி.

0 comments:

Post a Comment