இளையதளபதி விஜய் இவ்வருடம் முழுவதும் ஓய்வின்றி நடித்துக்கொண்டிருக்கிறார்.விஜய் தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காகவே தொடர்ந்து படங்களில் எந்த வித இடைவெளியும் இன்றி நடித்துக்கொண்டிருக்கிறார்.ஆரம்பத்தில் விஜய் ஒரு படம் முடிந்த் பின்பு ஓய்வு எடுத்த பின்பே மற்றைய படத்தில் நடிப்பார்.ஆனால் இப்பொழுது நிலைமை மாற்றமடைந்துள்ளது.
விஜய் சங்கரின் நண்பன் ஜெயம் ராஜாவின் வேலாயுதம் என மாறி மாறி நடித்து வருகிறார்.வேலாயுதம் படத்தின் சண்டைக்காட்சிகள் கடந்த வாரம் படம் பிடிக்கப்பட்டன .அதில் விஜய் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என கோலிவூட் சண்டைப்பயிற்சியாளர் கூறியுள்ளார்.தற்பொழுதும் விஜய் வேலாயுதம் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு எந்த விதமான ஓய்வும் இன்றி நடித்து வரும் விஜய் அடுத்து பகலவன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார்.இவ்வாறு விஜய் தொடர்ந்து நடிப்பது ரசிகளுக்காகவே ஆகும்.
0 comments:
Post a Comment