பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Showing posts with label யோகன் அத்தியாயம் ஒன்று. Show all posts
Showing posts with label யோகன் அத்தியாயம் ஒன்று. Show all posts

Saturday, May 12, 2012

விஜய்யின் 3 புதிய படங்கள்


விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். '7ஆம் அறிவு' படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் இயக்கும் 'யோகன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பிறகு 'மதராசபட்டினம்' விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

யோகன் அத்தியாயம் ஒன்று படம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் அடுத்த படம் ஜுலையில் ஆரம்பம்


விஜய் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கம் படம் யோகன். இப்படம் பற்றிய தகவல்களை கெளதம் மேனன் சென்ற வருடம் வெளியிட்டார். இதன் முதல் போட்டோக்களும் வெளியிடப்படன. இப்படம் ஜுலை மாதம் தொடங்கும் என கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். கெளதம் நீ தானே பொன்வசந்தம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளிலும் விஜய் துப்பாக்கி பட வேலைகளிலும் உள்ளனர். இருபடங்களும் யூனில் முடிவடைந்து விடும். அடுத்த மாதம் யோகன் படக்குழு வெளிநாடு பறக்க உள்ளது.
விஜய் மட்டும் தான் தமிழ் பட உலகை சேர்ந்தவர் எனவும் ஏனைய நடிகர்கள் வெளிநாட்டவர்கள்  என்றும்  கூறப்படுகிறது. இசை ரகுமான். தயாரிப்பு போட்டன் கதாஸ் மற்றும் ஈரோஸ் நிறுவனம். 

Wednesday, January 25, 2012

வெற்றி வழியில் விஜய்


விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்கள் வரவேற்பை பெறாத போதும் விஜய் நடிப்பில் இறுதியாக வந்த மூன்று படங்கள் அமோக வெற்றி பெற்றன. காவலன் பல எதிர்பின் மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்றது. வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நூறுநாளை தாண்டி ஓடியது. அடுத்து வெளிவந்த வேலாயுதம் படமும் நல்ல வரவேற்பை பெற்று இன்னமும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. நண்பன் படம் வெளிவந்து மெகா ஹிட் ஆகியுள்ளது. இவ்வாறு மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று ஹற்றிக் நாயகனாக விஜயை மாற்றியுள்ளது. இம்மூன்று படமும் வேறுபட்ட கதையை கொண்ட படங்களாகும். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத மூன்று படமாகும். இம்மூன்றும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தவிர இனி வர உள்ள மூன்று படமும் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூன்று படங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத படங்களாகும். துப்பாக்கி யோகன் மற்றும் இயக்குனர் விஜயின் படம் என்பனவாகும். விஜய் வெற்றி நாயகன் என அறிந்த நிலையிலும் இப்படங்களும் விஜயின் வெற்றிக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. 

Saturday, January 7, 2012

இளையதளபதியும் 2012ம்


விஜய்க்கு 2012 சிறப்பான வருடமாக அமையவுள்ளது. 2011ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்ததை விட இவ்வருடம் சிறப்பாக அமைய பல காரணங்கள் உள்ளன. இந்த வருடம் 3  வித்தியாசமான படங்களில் விஜய் நடிக்கிறார். இந்த படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பற்றிய தொகுப்பாக இவ் செய்தியை தருகிறோம்.
நண்பன்
விஜய் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் ஹரிசின் இசையில் இம்மாதம் 12ம் திகதி வெளிவர உள்ளது. இப்படம் 3இடியட்ஸ் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். சங்கரின் முதலாவது ரீமேக் படமாகும். ரீமேக் படம் என்றாலும் சங்கர் தனக்கேற்ற மாத்ரி பிரமாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவர உள்ளது. தென்னிந்தியா முழுவதும் இப்படம் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா என அணைத்து இடங்களிலும் படத்தை விற்று வருகிறார் ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம். இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு படங்களில் ஒன்றான இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவர உள்ளது. முதல் முறையாக ஜீவா சிறிகாந்த் சத்தியராஜ் இலியான அனுஜா என நட்சதிரப்பட்டாளம் இணைந்து நடிக்கும் படமாக வெளிவர உள்ளது.விஜய் சங்கர் இணையும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

துப்பாக்கி
தற்பொழுது மிக விரைவாக வளர்ந்து வரும் படம் துப்பாக்கி. விஜய் முருகதாஸ் இணையும் முதல படம் ரமணா கஜனி என வெற்றிப்படங்களை கொடுத்த முருகதாஸ் விஜயுடன் இணையும் படம் ஆகும். முருகதாஸ் விஜயுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற கனவை நனவாக்கிய படமாக இப்படம் அமைய உள்ளது. வித்தியாசாகர் மணிசர்மா என விஜயின் வெற்றி பட பாடல்களை கொடுத்த இசையமைபாலர்களை தவிர்த்து நண்பன் வெற்றி பாடல்களை கொடுத்த ஹரிஸ் மறுபடியும் துப்பாக்கியில் விஜய்க்கு இசையமைக்கின்றார். காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்க்கு ஜோடி ஆகின்றார். இன்னுமொரு ஹிரோஜின் இப்படத்தில் நடிக்கின்றார். இந்த வருட நடுப்பகுதியில் இப்படம் வெளியிடப்பட உள்ளது.

யோகன் அத்தியாயம் ஒன்று
இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க பட உள்ளது. கெளதம் விஜய் இணையும் முதலாவது படம். இப்படத்துக்கு இசை இசைபுசல் எ.ஆர்.ரகுமான். இப்படதுக்குரிய தீம் பாடலை இசையமைத்து கெளதமிடம் கொடுத்துள்ளார். திரில்லர் படமாக இப்படம் வெளிவர உள்ளது.ஈரோஸ் நிறுவனமும் போட்டான் கதொஸ் நிறுவனமும் இணையும் முதலாவது படம் இதுவாகும். இப்படம் கொலிவூட் தரத்தில் தயாராக உள்ளது.இப்படம் இந்த வருடம் மே மாதம் தொடங்க உள்ளது.இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த தைபொங்கலுக்கு வெளிவர உள்ளது.

Wednesday, January 4, 2012

விஜயின் தெரிவு என்ன?


விஜயின் 50  வது படத்தின் பின் விஜய் தொடர்ந்து ஹிட் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார். தொடர்ந்து நல்ல மற்றும் வித்தியாசம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவரின் தெரிவாகிய காவலன் மற்றும் வேலாயுதம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுடன் அனைவரது பாராட்டையும் பெற்றது. தற்பொழுது விஜய் முருகதாசுடன் துப்பாக்கி படம் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்து தொடர்ந்து இருபடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
விஜயின் அடுத்த படமான யோகன் பட முதல் போட்டோக்கள் வெளிவந்தன ஜி.வி.பிரகாச்குமார் தனது அடுத்த படமாக விஜயுடன் முதல் முதல் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் விஜய் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. விஜய் அடுத்து நடிக்கும் படம் எது என்பது விஜய் வாய் திறந்தாள் தான் தெரியும் எனினும் இவ்விரு படமும் 2012  ம் ஆண்டு வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, December 26, 2011

விஜய் படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம் சாங் ரெடி

முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என பெயரிட்டுள்ளனர். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தயாரிக்க உள்ளனர். இதனையடுத்து, கௌதம் மேனன், தற்போது தயாரித்து இயக்கி வரும் 'நீ தானே என் பொன்வசந்தம' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம் ரகுமான். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு, தான் இசை அமைப்பதாக கூறியதோடு, படத்திற்கு தீம் சாங் ஒன்றை காம்போஸிங் செய்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரகுமான். 

ஜேம்ஸ் பாண்டு ஆகிறார் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்தக் கதை சீனா உட்பட பல வெளிநாடுகளில் உருவாகிறது. இந்த படம், ஜேம்ஸ் பாண்டு கதை போல, நிறைய அத்தியாயங்கள் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஜேம்ஸ் பாண்டு போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். 

Tuesday, December 13, 2011

யோஹனும் விஜயும்


யோகன் படத்தை போட்டன் கதாஸ் நிறுவனமும் ஈரோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக கூறினோம் . இப்பொழுது விஜய் இப்படத்தை பற்றி கூறிய செய்தியை சொல்கிறோம் .
இப்படம் மிகவும் வித்தியாசமான படம் . நானும் கெளதமும் இணைந்து ஒரு படம் செய்ய எண்ணினோம் இறுதியாக இப்படத்தை தெரிவு செய்தோம். இப்படம் காதல் சண்டை மற்றும் திரில்லர் நிறைந்துள்ள படம் இப்படம் கண்டிப்பாக எனது ரசிகர்களுக்கு பிடிக்கும். கெளதம் மற்றும் ஈரோஸ் உடன் இணைந்து பணியாற்ற இருப்பது சந்தோசமாக உள்ளது என விஜய் கூறினார்.
இப்படம் முளிவதும் லண்டனில் படமாக்க உள்ளனர். இப்படம் சர்வதேச படமாக அமைய உள்ளது. இதனை தவிர தமிழ் சினிமாவில் முதன் முதலாக வரும் தொடர்சியான படமாக இது அமையவுள்ளது. ஏனெனில் இப்படத்தை தொடர்ந்து இப்படத்தின் பல பாகங்கள் வெளிவர உள்ளன என கெளதம் கூறியுள்ளார்.

Monday, December 12, 2011

தயாரிப்பாளரின் கைமாறியது விஜய் படம்

விஜய் கெளதம் இணையும் படம் யோகன் . இப்படத்தை கெளதம் மேனனின் போட்டோன் கதஸ் தயாரிக்க இருந்தது. இது தொடர்பான விளம்பரங்களும் வெளிவந்தன. இப்படத்தை  ஈரோஸ் தயாரிக்க முன் வந்துள்ளது .இப்படத்தை இரு நிறுவனங்கள்  இணைந்து தயாரிக்க உள்ளன.
இந்த நிறுவனத்தின்  முகாமைத்துவதுக்கு பொறுப்பான சுனில் லூலா கூறிய  போது எமது நிறுவனம் ஆனது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்து வருகிறது. எமது நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. தற்பொழுது தென்னிந்திய படங்களை தயாரிக்க உள்ளும் எமது முதலாவது படமாக விஜய் கெளதம் மேனன் இணையும் யோகன் படத்தை தயாரிக்க உள்ளோம். இப்படத்தின் கதை பிடித்துள்ளதால் தயாரிக்க ஒப்பு கொண்டோம். மிகவும் தரமான படத்தை வழங்குவோம். இப்படத்தில் வித்தியாசமான த்ரிலிங் கதையை உருவாக்கியுள்ளார் கெளதம் இதை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளோம் என்றார்.
கெளதம் மேனன் இது பற்றி கூறிய போது வேட்டையாடு விளையாடு படத்துக்கு பின் அந்த பட வரிசையில் இந்த படத்தையும் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். இப்படமானது மிகவும் நல்ல படமாக அமையும் முதன் முறையாக விஜயுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் ஒரு சர்வதேச படமாக அமையும். இப்படத்துக்கு இசை எ.ஆர்.ரகுமான் . இப்படதுக்குரிய தீம் பாடலை உருவாக்கி தந்து விட்டார் உண்மையாகவே நல்ல திமாக வந்துள்ளது. இதுவும் மகிழ்சியாக உள்ளது.இப்படத்தை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்தது மிகவும் நன்றி சர்வதேச அளவில் புகழ் பெற நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்வது  சந்தோசம் என்றார்.
இப்படத்துக்கு இசையமைக்கும் எ.ஆர்.ரகுமான் மிகுந்த மகிழ்சியை தெரிவித்துள்ளார். விஜய் கெளதம் ரகுமான் ஈரோஸ் என மிகப்பெரிய குழு இணைகின்றமை ஒரு நள்ள படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Friday, December 9, 2011

பிரிந்தவர் விஜய்யால் சேர்ந்தனர்


சேர்ந்தவர் பிரிந்தால் ஏசிக்கொள்வதும், பிரிந்தவர் சேர்ந்தால் ஈஷிக்கொள்வதும் பிரண்ட்ஷிப் ஃபிலாஸபி. இப்படி பிரிந்த பின்பும் ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளாமல் இருந்தார்கள் கவுதம் மேனனும், அவரது ‘விண்ணை தாண்டி வருவாயா’ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும். இப்படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் இந்த மனோஜும்தான். ஆனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படத்தில் இணைய முடியாதளவுக்கு விழுந்தது திருஷ்டி. டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் ஒளிப்பதிவு செய்ய அழைத்ததும் கவுதம் மேனனின் பேச்சையும் கேட்காமல் அங்கு போனார் இவர்.
இதன்பின் எந்த சந்தர்பத்திலும் மனோஜை தொடர்பு கொள்ளாமலிருந்தார் கவுதம். ஆனால் எல்லா வைராக்கியங்களையும் பொடி பொடியாக்குகிற அளவுக்கு ஒரு பிரச்சனை. கவுதம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் யாரை ஒளிப்பதிவாளராக நியமிப்பது என்ற பேச்சு எழுந்தது.
ஏன், விண்ணை தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் இருந்தால் நன்றாக இருக்குமே? என்றாராம் விஜய். அவரே சொல்லிவிட்ட பிறகு, தனது ஜென்ம பகையை பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஆகுமா? மனோஜுக்கே போன் அடித்தாராம் கவுதம்.
விஜய் புண்ணியத்தால் இப்போது பிரிந்தவர் கூடினர்.

Tuesday, December 6, 2011

விஜயின் இரட்டை சவாரி


விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் நண்பன் அதை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் யோகன் அத்தியாயம் 1  ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இவை இரண்டும் வித்தியாசமான படங்கள் எனக்கூறியுள்ளர் விஜய்.
இவ் இரண்டு படங்களும் குற்றவாளிகள் பற்றிய கதையாக இருக்கும் எனக் கூறுகின்றனர் அனால் அது உண்மையாக இருக்குமோ இல்லையோ  எனத்தெரியவில்லை.  யோகன் படம் ஒரு சர்வதேச துப்பறியும் படம் . ஆனால் துப்பாக்கி இந்தியாவில் நடக்கும் கதை. அதில் விஜய் என்னவாக வர உள்ளார் என்பது தெரியவில்லை. இப்படம் இரண்டும் மிகப்பெரிய வெற்றியடையும் என்பது உறுதி. இரண்டும் துப்பாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிக  வேகமான திரைகதை படத்திற்கு பெரிய பிளசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, November 11, 2011

Vijay’s “Yohan: Adhyayam Ondru” a french film remake


Vijay, who has signed Gautham Menon’s “Yohan: Adhyayam Ondru”, will play a spy a la James Bond in the the movie and it is also said that the actor will be seen in such a role for the first time.
According to sources, “Yohan…” is a remake of a French movie, “Largo Winch”, and will be shot in New York and Chennai.
“Yohan: Adhyayam Ondru” will see the director and the star teaming up for the first time.
“Though there were talks in the past to work together, they did not materialise for various reasons. Now we have found a right script to turn it into a big treat for the fans,” Goutham said in a recent interview.
The movie is expected to hit the screens in mid-2012.

Monday, November 7, 2011

விஜய் தயங்கினார், கௌதம் மேனன் சொன்னார் : 'யோஹன் அத்தியாயம் ஒன்று' பற்றி

அப்போது நண்பன் எப்படிப்பட்ட படம் என்ற கேள்விக்கு “ நண்பன் முழுப்படமும் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ஷங்கர் சார் ஒரு பிரம்மாண்டமான இயக்குனர். இதை பக்கத்தில் இருந்து உணர்ந்தேன்” சொன்னார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உண்மையா என்ற கேள்விக்கும் “ ஆமாம்! அந்தப் படத்தின் தயாரிப்பாளர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.” என்றார். ஆனால் கௌதம் மேனன் உடனான படம் பற்றி கேட்டபோது “ அதுபற்றி இப்போது எதுவும் பேச வேண்டாமே அது அடுத்த வருட புராஜெக்ட்!” என்று தயங்கினார் விஜய்! 
இதை கௌதம் காதில் செய்தியாளர்கள் போட யோஹன் பற்றி விரிவாகவே பேசினார் கௌதம் “ யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை.

 இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்ன்னு அவரே சொன்னார். நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.

Friday, October 28, 2011

இண்டர்நேஷனல் ஏஜெண்ட் விஜய் ! : கௌதம் மேனன்

விஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம்  கூறித்து கெளதம் மேனன் " 'யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்’னு அவரே சொன்னார்.

நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.

அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோஹன்’!'' " என்று தெரிவித்துள்ளார்.

Thursday, October 20, 2011

விஜயின் ஸ்பெஷல் நேர்க்காணல்

நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குநர் ராஜாவுக்கு வரும். பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க!'' - கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.

''ஷங்கர் - விஜய் காம்பினேஷன் சந்தோஷம்... எப்படி வந்திருக்கு 'நண்பன்’?''

''ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர்ப்!

ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்’ இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!''

''ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?''

''ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரே மில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்ச தும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!''

''கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?''

''பொது நண்பர் ஒருத்தர் மூலம் தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக் கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்கா விலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். 'யோஹன்’ படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விஷயம்!''

''உங்க படமும் உங்க நண்பர் சூர்யா நடிச்ச படமும் ஒண்ணா தீபாவளிக்கு வருதே?''

''ஆமா. ரெண்டு படங்களும் ஜெயிக்கணும்னு ரெண்டு பேரும் நினைப்போம். ரெண்டு யூனிட்டும் ஜெயிக்கிறதுக்கு என்னோட வாழ்த்துகள்ண்ணா!''
நன்றி :- ஆனந்த விகடன்

Sunday, October 9, 2011

யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணி இரகசியம்


யோஹன் அத்தியாயம் ஒன்றின் கூட்டணிக்கு முக்கிய காரணமே ஏ.எம் ரத்னம் தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் இந்த கூட்டணியை சேர்த்து வைத்தது ஏ.எம்.ரத்னம் என்பது நாம் யாருக்கும் தெரியாது.
விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி இயக்குனர் கெளதமை ஆலோசனைக்காக உட்கார வைத்தது ஏ.எம்.ரத்னம்தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
கதை விஜய்க்குப் பிடித்துப்போனதால், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று படத்தை கெளதம் ஆரம்பித்துவிட்டாராம்.
படப்பிடிப்புகள் அமெரிக்காவில் ஆரம்பமாகி ஐரோப்பாவில் முக்கிய இடங்களிலும் எடுக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான படப்பிடிப்புகள் நியூயார்க்கில் எடுக்கப்படுகிறது.

Thursday, September 29, 2011

Sameera opposite Vijay?


Gautham Vasudev Menon, even as busy filming his first trilingual venture 'Neethane En Ponvasantham', seems to have zeroed in on the heroine for 'Yohan Adhyayam Ondru', his maiden film with Vijay.
If sources are to be believed, Gautham's 'favourite actress' Sameera Reddy would share the screen space with the Ilayathalapathy in this big-budget venture, which is set to hit the floors by early 2012.
"But an announcement is kept under wraps since Gautham wants to complete Neethane En Ponvasantham, before shifting focus to Yohan Adhyayam Ondru. Vijay too is happy to have Sameera on board," sources say.
Sameera was the leading lady of two of Gautham's earlier movies- 'Varanam Aayiram' and 'Nadunisi Naaygal'. In an interview earlier, the actress mentioned that she would act in a film without even listening to the script, if it is directed by Gautham.

Tuesday, September 27, 2011

யோகனுக்காக தயாராகும் விஜய் கெளதம் ரகுமான்


இளைய தளபதி விஜய் கொலிவுட்டில் 'வேலாயுதம்', 'நண்பன்' போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நாயகன் ஜீவா-நாயகி சமந்தா நடிப்பில் உருவாகும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் மும்மரமாக இருக்கின்றார்.
அடுத்த வருட துவக்கத்தில் 'யோஹன்' படத்துக்கான வேலைகள் துவங்கும் என்பதால் இப்போதிலிருந்தே படத்தின் நாயகன் விஜய் தயாராகி வருகிறார் என்கிறது பட வட்டாரம்.
விஜய்க்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக இருக்கும். தனது பாணி படங்களில் இருந்து விஜய் சற்று விலகி, கொலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், கெளதம் மேனன், முருகதாஸ் ஆகியோரின் படங்களில் வித்தியாசமாக முயற்சிக்க களமிறங்கியுள்ளார்.
இதனால் விஜய்யின் 'நட்சத்திர நாயகன்' அந்தஸ்து மேலும் பல மடங்கு மிளிரும் என பட வட்டாரம் எதிர்பார்க்கிறது.

Tuesday, August 30, 2011

Vijay - Gautham Menon film goes international


Vijay's film with Gautham Menon entitled Yohan: Adhyayam Ondru is currently one of the most discussed projects, even though shooting has not begun yet and the film is still in the planning stages.
The latest on the film is that location scouts are busy zeroing in on possible places to shoot the film. Gautham Menon's films like Vettaiyaadu Vilaiyaadu and VTV required the team to travel abroad to shoot portions of the film. New York is a favored destination for this director and for VTV, Gautham Menon even shot in Malta. Vijay's character in the film requires him to fly to all corners of the globe and hence massive chunks of the film will be shot in different parts of the world.

Thursday, August 25, 2011

Vijay's 'Yohan Adhyayam Ondru' - Tidbits in here!

The basic plot of 'Yohan Adhyayam Ondru', a film which will bring together Vijay and Gautham Vasudev Menon for the first time, is here.

"The film is about a common man who hails from Tuticorin and establishes his network around the world. Vijay plays a much wanted person who is in the radar of police departments of almost all countries," sources say.

An action thriller, the script will be totally new to Tamil cinema, they say and add: "Yohan Adhyayam Ondru will be an edge-of-the-seat entertainer and it will go on floors by the beginning of next year, that is, 2012."

To be produced by Photon Kathaas Productions, a company run by Gautham himself, the movie will have music by A R Rahman, cinematography by Manoj Paramahamsa. "Gautham will now start a film with Jiiva and will begin Yohan after its release," sources add.