Sunday, March 17, 2013

கிராமத்து வேடத்தில் கலக்கும் விஜய்

ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஜில்லா.
படம் பற்றி நேசன் கூறுகையில், ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரிவது சவாலான விஷயம்.
என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லை என்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
படத்தின் படப்பிடிப்பு மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவில் நடக்கும்.
படத்தின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ஜில்லா பொங்கல் விருந்தாக வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்சின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment