பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Showing posts with label துப்பாக்கி. Show all posts
Showing posts with label துப்பாக்கி. Show all posts

Wednesday, January 2, 2013

2012 Top 10 Tamil Movies


1st Place – Thuppakki
2nd Place – Nanban
3rd Place – Oru Kal Oru Kannadi
4th Place – Naan Ee
5th Place – Vazhakku Enn 18/9
6th Place – Naduvula Konjam Pakkatha Kaanom
7th Place – Kadhalil Sothapuvathu Eppadi
8th Place – Kumki
9th Place – Pizza
10th Place – Neethane En Ponvasantham

2012ம் ஆண்டின் Top 10 Celebrities



தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்த முன்னணி நடிகர், நடிகைகளின் வரிசையை சினி உலகம் தெரிவு செய்துள்ளது.
ரசிகர்களாக இருந்தாலும் வசூலாக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இளைய தளபதி விஜய்க்கே அதிகமான வரவேற்பு இருக்கிறது.

அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், சூர்யா, சியான் விக்ரம், சிம்பு ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர்.

இந்த வருடம் அஜித் குமார் பில்லா 2, சூர்யா மாற்றான், விக்ரம் தாண்டவம், சிம்பு போடா போடி ஆகிய படங்களில் நடித்திருந்தனர்.

இதே போல் கதாநாயகிகளின் வரிசையில் காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் சினி உலகம் தெரிவு செய்துள்ள டாப் 10 நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

காஜல் மாற்றான், துப்பாக்கி, ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி, அமலா பால் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, சமந்தா நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சலி கலகலப்பு மசாலா கபே படங்களில் நடித்தனர்.

Thursday, December 27, 2012

2012ஆம் ஆண்டில் சாதனை படைத்த மதன் கார்க்கி

2012ஆம் ஆண்டில் அதிகளவில் ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கி தான்.
கவிஞர் வைரமுத்துவின் மகனாக இருந்தாலும், அவரின் சிபாரிசு ஏதும் இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2012ஆம் ஆண்டில் 14 படங்களில் மொத்தம் 35 பாடல்களை எழுதியுள்ளார். இவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை.
இவற்றின் பட்டியல்,
அஸ்க் லஸ்கா - நண்பன்.
அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி.
பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி.
வீசும் வெளிச்சத்திலே - நான் ஈ.
கொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ.
ஈடா ஈடா - நான் ஈ.
வாய் மூடி - முகமூடி.
மாயாவி - முகமூடி.
கால் முளைத்த பூவே - மாற்றான்.
ரெக்கை முளைத்தேன் - சுந்தர பாண்டியன்.
கூகுள் கூகுள் - துப்பாக்கி.
அண்டார்டிகா - துப்பாக்கி.
ஏலே கீச்சான் - கடல்.
அடியே - கடல்.
அன்பின் வாசலிலே - கடல்.

Saturday, May 12, 2012

விஜய்யின் 3 புதிய படங்கள்


விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். '7ஆம் அறிவு' படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் இயக்கும் 'யோகன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பிறகு 'மதராசபட்டினம்' விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

யோகன் அத்தியாயம் ஒன்று படம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, May 7, 2012

விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்

பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது. நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது. முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார். "புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார். ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.

Tuesday, March 20, 2012

துப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ சீருடையுடன் செல்கிறாராம் விஜய்!


போக்கிரி திரைப்படத்தில் விஜய் பொலீசாக இருந்த போதும், அவர் சீருடையுடன் நடிக்கவில்லை. பொதுவாக விஜய் திரைப்படங்களில் சீருடை அணிவதை தவிர்த்து வருபவர் அதாவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் துப்பாக்கியில் சீருடையுடன் நடிக்கிறார் இளைய தளபதி. இப் படத்தில் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால்: ஒரு சீனில் காஜல் அகர்வாலை அவர் பெண் பார்க்க போகிற மாதிரி காட்சியிலும் கூட இராணுவ சீருடையுடன்தான் நடித்திருக்கிறாராம் விஜய்.

Monday, March 19, 2012

மாற்றான், துப்பாக்கி படங்களின் நாயகி காஜல் அகர்வால் பேட்டி


தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவாகி வருகிற நாயகி காஜல் அகர்வால் மாற்றான், துப்பாக்கி படங்களைப் பற்றி பேட்டியளித்துள்ளார்.
கொலிவுட்டில் கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி என இரு படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இந்தப்படங்களில் வரும் நாயகி கதாப்பாத்திரம் பற்றி காஜல் அகர்வால் பேசியுள்ளார்.
சூர்யா உடன் 'மாற்றான்' படத்தில் மொடல் பெண்ணாக நடித்துள்ளேன். மாற்றான் படப்பிடிப்பு ரஷ்யா, பிரான்ஸ் உட்பட பலநாடுகளில் நடந்த போது நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன்.
இப்படத்திற்காக ரஷ்யா மொழி கற்றுள்ளேன்.
மேலும் முருகதாசின் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யுடன் நடித்துள்ளேன். இப்படத்தில் விஜய்யை காதலிக்கும் குறும்புக்காரப் பெண்ணாக என்னுடைய கதாப்பாத்திரம் அமைந்துள்ளது.
ரசிகர்கள் மனதில் இந்த வேடம் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.

Saturday, March 17, 2012

சென்னையில் பாட்டு ! 'பாங்காக்'கில் Shoot

'துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.

மும்பையில் எவ்வித தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்காக பாங்காக்கில் விஜய், காஜல் அகர்வால் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இப்பாடலை பாடியிருப்பவர் விஜய்.

இளைஞர்களின் ரசனையை  மனதில் கொண்டு  இப்பாடலுக்கு டியூன் போட்டிருக்கிறாராம் ஹாரிஸ். இரண்டு வாரங்கள் முன்னர் சென்னையில் இப்படத்தின் பாடலை தயார் செய்தவர்கள், தற்போது அதை பாங்காக்கில் படமாக்கி வருகிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், அதே நேரத்தில் தனது பாணியை கைவிடாமல் 'துப்பாக்கி'யை தயார் செய்து வருகிறாராம் முருகதாஸ்.

Tuesday, March 6, 2012

மீண்டும் விஜய்யுடன் இணைந்த ஜெய்


துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நாயகன் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் நாயகன் ஜெய்யிடம், துப்பாக்கியில் விஜய்யின் தம்பியாக நடிப்பதற்கு திகதிகள் கேட்டுள்ளார்.
நாயகன் ஜெய், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே திகதிகளை தந்துள்ளார்.
ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி திரைப்படத்தில் நாயகன் ஜெய் நடித்துள்ளார்.
தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்பு இளைய தளபதியுடன் மீண்டும் ஜெய் இணைகிறார்.

Saturday, March 3, 2012

'துப்பாக்கி'க்கு ஸ்ரீகர் பிரசாத்!

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 28, 2012

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்



விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. 
படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும். 
முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர்
ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில்
40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று
அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக
பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில்
விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று
காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு
இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு
தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

சொந்தக் குரலில் விஜய் பாடல்

விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான்  கடைசியாக பாடினார்.

அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.

'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன்  ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி,  விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய்.  ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, February 27, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கியது


பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டிருந்த துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்கு பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ஏற்பட்ட தயாரிப்பாளர்-பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரத்துசெய்யப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக, கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியில் இளையதளபதி விஜய், என்கவுன்டர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Friday, February 24, 2012

பெப்சி பிரச்சினைக்கு மத்தியில் விஜய்யின் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.

Sunday, February 19, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: விஜய்


துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கியில் இளையதளபதி விஜய் நடிக்கிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்துவந்த நிலையில், தயாரிப்பாளர்-பெப்ஸி பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் குறும்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் துப்பாக்கி கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் ரசிகர்கள் கேட்டதற்கு, துப்பாக்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று வெளிவரும் தகவல்களை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்-பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறினார்.

Wednesday, February 15, 2012

விஜய்க்கு வில்லனா?

'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில்  பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

Wednesday, February 8, 2012

துப்பாக்கி பிந்துமா?


துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்பு குறும்படம் ஒன்றினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் நண்பன் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார்.
இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார்.
தன் வீட்டிற்கு வெளியே ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை கேட்ட முருகதாஸ், காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
அந்த குறும்படத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன்-மாணவியை முருகதாஸ் தேடி வருகிறார்.
குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Monday, February 6, 2012

துப்பாக்கி'யில் சத்யன்


விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும்  'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை  'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு  தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

Friday, February 3, 2012

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.   

'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும்.  இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன். 

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

'துப்பாக்கி' ஷூட்டிங் ! : ஏ.ஆர்.முருகதாஸ்

நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. 'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் இருந்ததால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டது. 

'நண்பன்' வெளியான சமயத்தில் பெப்சி - தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னையால், 'துப்பாக்கி' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'நண்பன்' படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " விஜய் 'நண்பன்' படத்தில் அருமையாக நடித்து இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக் முடிந்தவுடன் அவருடன் பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது " என்று கூறியுள்ளார்.

சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மெளனகுரு' படத்திற்கும்  "மௌனகுரு படம் பார்த்தேன்.. அருமையான படம்.. பார்க்க வேண்டிய படம் ! " என்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.