பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Thursday, June 30, 2011

ஆகஸ்டில் முடியும் நண்பன்


சங்கருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளிலிருந்து விஜயின் நண்பன் படம் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக உள்ளது. நண்பன் படப்படப்பிடிப்பு வேகமாக இடம்பெற்று இப்பொழுது சிறிய இடைவெளிவிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் வித்தியசமான லொகேசனில் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ஜீவா சிறீகாந் இலியானா என நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது அதன் பின்  நகர்ந்து இப்பொழுது கிளைமைக்ஸ் காட்சியும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. சங்கரின் இணையத்தளத்தில் வெளியிட்ட படங்களிலிருந்து படத்தின் பல கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்பதை அறியலாம். விஜய் இலியானா பங்குபெறும் பாடல் அழகான லொகேசனில் எடுத்துள்ளதுடன் விஜய் ராஜ உடையுடன் காட்சித்தருகிறார் படத்தின் பாடல்களின் படப்பிடிப்பும் சங்கர் படத்தில் பிரமாண்டம் அதை மீண்டும் நிலைநிறுத்த உள்ளது நண்பன் பாடல்கள்.இப்படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு யூலையில் ஆரம்பமாக உள்ளது .நண்பன் பட கிந்தி படத்தில் 109 காட்சி இருந்தன அதில் பல புதிய காட்சிகளை சங்கர் இணைத்துள்ளதாக படத்தரப்பினர் கூறுகின்றனர். ரசுல் பூக்குட்டி சவுன்ட் எபெக்ட்டை செய்யவுள்ளார். இப்படம் இவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக  அமையவுள்ளது.

விஜயின் வியத்தகு மாற்றம்



முன்பொரு முறை ஊடக சந்திப்பு ஒன்றில் இயக்குனர் தரணி சொன்ன வார்த்தைகள் இது.
விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம்.
தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும். அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர்.
”சிங்கம்” படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் சொன்னார் ஹரி. ”காக்க காக்க” கதையை கூட முதலில் இவரிடம் தான் சொன்னார் கவுதம். ”கஜினி” மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம் தான். ”அயன்” கதையின் நாயகனாக கே.வி.ஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரே தான்.
இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம்.
விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Tuesday, June 28, 2011

தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.

தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்... ஆமாம் விஜய்- அஜித் இருவரது படங்களும் பல வருடங்களுக்கு பின்னர் ஒரே மாதத்தில்,இரு வாரகால இடைவெளியில் வெளிவரப்போகின்றன. அதுவும் இரண்டுமே அவரவர் ரசிகர்களினதும், ஏனைய சினிமா ரசிகர்களினதும் அதி உச்ச எதிர்பார்ப்புடன் வெளிவருபவை.
ஐந்து படங்களின் தொடர் தோல்விக்குப்பின்னர் காவலன் தந்த வெற்றியின் உற்சாகத்துடன் விஜயும், பில்லா என்ற பெரு வெற்றிக்கு பின்னர் ஏகன், அசல் என்ற இரு படுதோல்விப் படங்களை கொடுத்து எப்படியும் வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற வேகத்துடன் அஜித்தும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜனி -கமலுக்கு அடுத்தபடியான ஜோடிகள், விஜய் - அஜித் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பின்னர் எத்தனையோ இளம் நடிகர்கள் போட்டிக்கு வந்துவிட்ட போதும் இவர்களுடைய படங்களுக்கு உள்ள ஓபனிங் வேறு யார் படத்துக்கும் இல்லை என்பதுதான் நிஜம். இருவரது படங்கள் ரிலீசாகும்போதும் திரையரங்கு பக்கம் சென்று பார்த்தால் புரியும், இருவரது ஓபனிங்கும். பால் ஊற்றப்படும் கட் அவுட்டுகள், தேங்காய் உடைப்புகள், அரங்கு நிறைந்த காட்சிகள் என திரையரங்கே திருவிழாக்கோலம் பூனும். ஓபனிங்கில் மாத்திரமல்ல, இன்றைய காலத்தில் ரஜனிக்கு அடுத்தபடியாக அதிக, அசைக்கமுடியாத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

ஒரு புறம் குழந்தைகள் முதல், பெரியவர் வரை அனைவரது மனங்களையும் கவர்ந்த விஜய். தொடர்ந்து நன்கு படங்கள் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் நடித்துவந்தார். இதுதான் இன்று இவரை எதிர்ப்பவர்கள் விஜய்மேல் கூறும் குற்றச்சாட்டு. அதாவது விஜய் வளர்ந்தது தன் தந்தையின் இயக்கத்தில்தான் என்று. ஆனால் அவை எதுவுமே வெற்றியடையவில்லை.
விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய, அவரது முதல் வெற்றிப்படம் “பூவே உனக்காக” விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்தது. அதைவிட காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவை விஜயின் இன்றைய வெற்றிக்கான அடித்தளங்கள். பிரியமுடன், கன்னுக்குள் நிலவு ஆகிய இரு மாறுபட்ட , வித்தியாசமான பாத்திரத்தை ஏற்றதோடு நிறுத்திவிட்டு அதன் பின்னர் தனக்கான ஒரு பாதையை வகுத்து காதல், ஆக்ஸன் இரண்டிலும் வெளுத்து வாங்கி வருகிறார். இன்று ரஜனிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களைக்கொண்ட ஒரேயொரு நடிகராக விஜய் மட்டுமே உள்ளார். தமிழ்நாட்டில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர் மன்றங்கள். கேரளாவில் ஒரு படி மேலே போய் விஜய்க்கு சிலை வைக்கும் அளவிற்கு ரசிகர் பட்டாளம். ஐந்து தோல்விப்படங்கள் கொடுத்தும் முன்னனி இடத்தை தக்கவைத்துக் கொண்டு அடுத்த ஒரு வெற்றியில் அந்த ஐந்து படங்கள் கொடுத்த தோல்வியை மறக்கடித்து மறுபடியும் தனக்கான முன்னனி இடத்தை நிலைனிறுத்தியுள்ள இளையதளபதி விஜயும்,

மறுபுறம், அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, திரைத்துறைக்குள் யாருடைய ஆதரவுமின்றி நுழைந்த அஜித். அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையாயினும் அப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. முன்னதாக 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி சிறந்த புதுமுகத்திற்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். ஆசை, காதல் மன்னன் ஆகிய படங்கள் இன்றும் பார்க்கத்தூண்டும் சிறந்த படங்கள். ஆசை அஜித்தின் முதலாவது வெற்றிப்படமாக அமைந்தது. தனது ஐந்தாவது படமாக ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு சிறிய வேடத்தை ஏற்றிருந்தார். அப்போது யாரும் அஜித் இந்தளவு பெரிய நடிகராக வருவார் என நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு, பில்லா என மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிக்காட்டி வருபவர். விஜய்க்கு நிகரான ரசிகர்களை கொண்டவர்(அண்மையில் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து தான் நிஜத்திலேயே ஒரு ஹீரோ என்பதை நிரூபித்தவர்)

இருவரும் முதலில் மோதிக்கொண்ட காலப்பகுதி 2001 ஆம் ஆண்டு. விஜயின் ப்ரண்ட்ஸ் திரைப்படமும் அஜித்தின் தீனா திரைப்படமும் மோதிக்கொண்டன. இரண்டுமே பெரு வெற்றி பெற்ற படங்கள். விஜய் தன்னை காதல்,சென்டிமென்ட் ஹீரோவாகவும், அஜித் விஜய்க்கு நிகரான மாஸ் ஹீரோவாகவும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார்கள்.
அதன் பின்னர் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என மோதிக்கொண்டார்கள்.
இப்போது மோதப்போவது வேலாயுதம், மங்காத்தாவுக்காக
அதுவும் வெற்றி, தோல்விகள், அது தந்த வடுக்கள் என சகல விதத்திலும் பக்குவப்பட்ட நிலையிலேயே இருவரும் மோதப்போகிறார்கள். கட்டாயம் இந்த மோதல் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் விஜயும் சரி, அஜித்தும் சரி, தம்மை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். தவிர வேலாயுதம் இயக்குனர் ராஜாவிற்கும், மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் இறுதிப்படங்கள் தோல்வியே. ஆகவே இருவரும் தங்களை நிரூபிக்கவேண்டிய்ட தேவை உள்ளது.

Monday, June 27, 2011

சங்கரை பாராட்டிய விஜய்



ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடிக்கும் படம் 'நண்பன்'.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகின்றது. ஷங்க‌ரின் இயக்கம் குறித்து விஜய் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசிஸ்டெண்டாக பணிபு‌ரிந்தவர் ஷங்கர்.
இப்போது ஷங்கர் இந்தியாவின் முன்னணி இயக்குனர். ஷங்கர் படம் என்பதால் நண்பனில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக விஜய் நடித்து வருகிறார்.
தன்னுடைய சினிமா வரலாற்றில் 'நண்பன்' முக்கியமான படமாக இருக்கும் எனக் கூறிய விஜய், கோலிவுட் தரத்தில் படமெடுக்கிறார் ஷங்கர் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

நண்பன் பற்றிச்சங்கர்

சங்கர் தனது இணையத்ததளத்தில் நண்பன் பற்றிய செய்தியை நீண்ட காலத்தின் பின் பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது ரசிகர்களை நீண்ட காலத்துக்கு பின் சந்திப்பது மகிழ்ச்சி தொடர்ந்து நண்பன் படப்பிடிப்பு அந்தமான் ஜூரோப் கோயம்புத்தூர் சென்னை என இடம்பெற்றது நண்பன் படம் இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளது கிளைமஸ் உட்பட அனைத்து காட்சிகளையும் வித்தியாசமான லொகேசனில் வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம் எனவே எடிட் பண்ணி டப்பிங் செய்ய வேண்டி இருந்தது அடுத்த கிழமை மீண்டும் நண்பன் படபடப்பிடிப்பு தொடங்கவுள்ளது இது நிறைய நாட்கள் இடம்பெற உள்ளது.விரைவில் படத்தை முடிக்கவுள்ளோம்.சவுன்ட் டிசையினுக்காக எந்திரனின் பின் ரசுல் பூக்குட்டியை இணைத்துள்ளோம்.இறுதி வாரம் பாரத்க்கல்லூரியில் படப்பிடிப்பை நடத்தினோம் என்றார் சங்கர்.  

நண்பன் ஸ்டில்கள்
















விறுவிறு நண்பன், விடாத ஹாரிஸ் - டென்ஷன் குறையாத ஷங்கர்.


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா என்று பிஸியான நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிஸி பிஸியான இயக்குனர் ஷங்கர். படப்பிடிப்பும் ஈமெயில் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவே ஷங்கருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறதாம். ஏன்?
மேற்படி நால்வருமே பரபரப்பானவர்கள் என்பதால் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்கள். அதனால் சொன்ன காலத்திற்குள் படத்தை முடித்தால்தான், எங்க பிழைப்பு ஸ்மூத்தா போகும் என்கிறார்களாம். அதுமட்டுமல்ல, படத்தை நவம்பருக்குள் வெளியிட வேண்டும் என்று நெருக்குகிறார்களாம் தயாரிப்பு நிறுவனத்திலும்.
பொதுவாகவே தான் இயக்கும் படங்களின் எடிட்டிங் நேரத்தில் அங்கேயே இருப்பார் ஷங்கர். இப்போது எல்லாமே தலைகீழ். எடுத்த பகுதிகளை எடிட்டருக்கு அனுப்பிவிட்டு அதை எப்படி செய்திருக்கிறார் என்பதை கூட கவனிக்க நேரமில்லாமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் ஹாரிஸ் ஜெயராஜின் மெத்தனமும் இவரது கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.
படத்தில் விஜய்- இலியானா பாட வேண்டிய டூயட் பாடலை இன்னும் முடித்து தராமலே இருக்கிறார் ஹாரிஸ். இவர் வெளிநாட்டில் நடைபெறவிருக்கும் இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளப் போவதால், இந்த வேலையை தள்ளிப் போடுகிறாராம். எலக்ட்ரிக் ரயிலில் எல்லாமே வேகம்தான். ஆனால் செயினை பிடித்து தொங்குகிறாரே ஹாரிஸ்! என்னதான் செய்யப் போகிறாரோ ஷங்கர்...?

Sunday, June 26, 2011

விஜய்யைப் பற்றிய சில தகவல்கள்


நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த செந்தூரப்பாண்டி, விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! 

காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலாயுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் உள்பட பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ஏனோ இப்போது பாடுவதைத் தவிர்த்து, புதிய பாடகர்களை உற்சாகப்படுத்துகிறார்! விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். 

இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது! திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய்.அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்! எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். 

அதிசயிக்கும்படியான பெருவாரியான சி.டி. கலெக்ஷன் உண்டு அவர் வீட்டில். நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை! விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது. 

ஆனால், இப்போது இரண்டு சிறு நெளி மோதிரங்களை அணியத் தொடங்கியிருக்கிறார்! ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!

ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை ஹாய் கீஸ் எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் வாங்க போங்கதான்! வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு.

சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்! விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். 

கொட்டிவாக்கம் வீட்டில் டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்! சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.

20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசாம் அது! அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது அண்ணாமலை பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்! 

நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்! நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது மச்சி . மற்றவர்களை விஜய் அழைப்பது என்னங்கண்ணா! கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். 

நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்! எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. 

இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்! வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. அம்மா ஷோபா சந்திரசேகரை இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். 

அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்! மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பா வின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர் கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருகிறார் விஜய். 

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு! 

ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களில் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்! 

சில வருடங்களாக அரசியலில் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார். கடந்த தேர்தலில் இவர் ஆதரித்த அதிமுக வெற்றியடைந்ததில் விஜய்க்கு ரொம்ப சந்தோஷம். நேரடி அரசியலில் இறங்குவதில் விஜய்யை விட விஜய்யின் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

"நண்பன்" படத்தில் நடிப்பது புது அனுபவம் - இலியானா


ஷங்கர் இயக்கத்தில் "நண்பன்" படத்தில் நடிப்பது புது அனுபவம், ஒவ்வொரு காட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஷங்கர்.
ஒரு காட்சியை படமாக்கினால் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைக்கூட துல்லியமாக கவனிக்கிறார்.
படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் வேலையில் மூழ்கி விடுவார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.
அதில் இதுபோன்ற அனுபவம் வாய்த்ததில்லை. நடிகையானதிலிருந்தே எனது அம்மா எனக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் இருந்து வருகிறார்.
சிறு வயதில் வெற்றி, தோல்வி மனதை பாதிக்கும். படம் வெற்றி பெற்றால் பெருமையாக இருக்கும். தோல்வி அடைந்துவிட்டால் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதுபோன்ற நேரங்களில் சினிமாவை விட்டு விலகி விட நினைப்பேன். அப்போதெல்லாம் எனக்கு அம்மாதான் ஆறுதல் கூறுவார். இந்தியில் "பர்பி" படத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ராவுடன் நடிக்கிறேன்.

Saturday, June 25, 2011

வேலாயுதம் பட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவு அடுத்த படம் யாருக்கு


விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யா மோகன் பாண்டியராஜன் சந்தானம் சத்தியன் மற்றும் பலர் நடிக்கும் படம் வேலாயுதம் .இப்படம் விஜயின் பிறந்தநாளன்று திரைக்கு வர இருந்தது ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இப்படத்தின் வெளியீட்டுத்திகதி ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போனது. இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த செய்தியை விஜய் அன்டனி தனது பேஸ்புக்கில் இன்று தெரியப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு இசை விஜய் அன்டனி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தின் பாடல்களை யூலையில் எதிர்பார்க்கலாம் எனக்கூறியுள்ளார் விஜயின் படங்களில் வித்தியாசமான சூப்பர்மேன் படமாக வேலாயுதம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தில் விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இருப்பதுடன் மேலும் பல புதுமைகளையும் காணலாம் என ராஜா கூறியுள்ளார்.இப்படம் நாளை முடிவடைந்த பின் போஸ்புரடெக்சன் ரீ-ரெக்கோடிங் பணிகள் தொடங்கவுள்ளன. விஜய் அடுத்த கிழமையிலிருந்து நண்பன் படத்தில் நடிக்க உள்ளார் ஆகஸ்ட் மாதம் வேலாயுதம் படம் வெளிவரும் நிலையில் நண்பன் படப்பிடிப்பும் முடிவடைந்து விடும்  என சங்கர் கூறியதிலிருந்து தெரியவந்துள்ளது. இப்பொழுது விஜய் ரசிகர்களிடம் உள்ள கேள்வி என்ன எனில் விஜய் அடுத்து நடிக்கும் படம் என்ன என்பதாகும். விஜய் தான் வாக்களித்த படி  சீமானுக்கு கால்சீட் கொடுக்க உள்ளார் எனத்தெரிகிறது. எனினும் விஜய் மற்றும் சீமான் தரப்பு உத்தியோக பூர்வ அறிவிப்பை யூலை மாதம் வெளியிட உள்ளனர்.

பிஸியான நடிகர்கள் வேகமான இயக்குனர்


சங்கர் தனது படத்தை மிக வேகமாக எடுத்து வருகிறார் சங்கர் தனது முன்னைய படங்களில் காட்டாத வேகத்தை நண்பன் படத்துக்கு எடுத்து வருகிறார் ஒவ்வொரு நாளையும் சரியான முறையில் பிரயோகித்து படத்தை எடுத்து வருகிறார். இது இவ்வாறு இருக்க படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஏனைய படங்களில் பிஸியாக உள்ளனர். விஜய் வேலாயுதம் படத்திலும் ஜீவா ரெளத்திரம் மற்றும் வந்தான் வென்றான் படத்திலும் சிறீகாந் எதிரி எண் 3 படத்திலும் இலியானா பார்பி ஹிந்திப்படத்திலும் நடித்து வருகின்றனர் இதில் இவர்கள் கொடுக்கும் கால்சீட்டை வைத்து படத்தை நகர்த்தி வருகிறார் சங்கர் இப்பொழுது நண்பன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மும்பைக்கு பறந்து விட்டார் இலியான அப்படத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நண்பன் படப்பிடிப்பில் பங்கு பற்ற உள்ளார் இலியானா.தற்பொழுது ஜீவா சிறீகாந் இலியானா சத்தியராஜ் பங்கு பற்றும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வேலாயுதம் படப்பிடிப்பில் விஜய் இருந்ததால்  அவர் சம்பந்தப்பட்ட காட்சி எடுக்கப்படவில்லை.அடுத்து சிறீகாந் விஜய் ஜீவா பங்குபெறும் காட்சி படமாக்கப்படவுள்ளது. 

விஜய்யை குழப்பிய இயக்குனர்


இதோ அதோ என ஒராண்டுக்கு மேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.
காவலன் முடித்த பிறகு, வேலாயுதம் முடிந்த பிறகு, ஷங்கர் படம் முடிந்த பிறகு என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போது தான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ.65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட் தயாரிப்பாளரும் தான் விஜய் மனசைக் கெடுத்துவிட்டார்களாம்.
முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சீமான் புராஜக்டை ஆரம்பிக்க முடியுமா என யோசிக்கிறார் விஜய் என்கிறார்கள். ஆனால் முருகதாஸ் கதையைவிட, மிக உணர்ச்சிப்பூர்வமான, விறுவிறு அதிரடி ஆக்ஷன் கதை சீமானுடையது. விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.
பெரிய பட்ஜெட்டை நம்பி அகலக் கால் வைப்பதைவிட இப்போது சீமான் படத்தை முடியுங்கள், அது தான் சரியாக இருக்கும் என்று நலம் விரும்பிகள் ஒரு பக்கம் விஜய்க்கு கூறி வருகிறார்களாம். அதனால் தான் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய், அடுத்த படம் சீமானுக்கா முருகதாசுக்கா என்று கேட்ட போது, "பார்க்கலாம்" என்று மையமாக சொல்லி வைத்தார்.

Friday, June 24, 2011

வேலாயுதம் வீடியோ




Thursday, June 23, 2011

விஜய்யை அடுத்து இயக்குவது யார்?



விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வேலாயுதம்'.  இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற் இருக்கிறது.

அனைத்து படப்பிடிப்புகளும் நடந்து முடிந்தவுடன் ஜுலை 2வது வாரத்தில் இசை வெளீயிட்டு விழா நடைபெற இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்த வெளீயிடாக ஷங்கரின் இயக்கத்தில் 'நண்பன்' வெளிவர இருக்கிறது. அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது தான் இப்போதைய தமிழ் திரையுலகினரின் பேச்சு!.

சீமான் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். சீமான் அடுத்து நான் விஜய் படத்தை தான் இயக்க இருக்கிறேன் என்று கூறி வந்தாலும் விஜய் இன்னும் எனது அடுத்த படம் இது தான் என்று கூறவில்லை. அதுமட்டுமல்லாது ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யா நடிப்பில் 'ஏழாம் அறிவு' படத்தை முடித்துவிட்டு விஜய் வைத்து படம் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விஜய். அச்சந்திப்பில் விஜய் பேசியது "
எனது திரையுலக வாழ்க்கையில் 'காவலன்' படம் முக்கியமானது. அப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தேன்.  அனைத்து பிரச்னைகளை முடிந்து படம் வெளியாகி வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாது ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட்டோம்.

அடுத்து 'நண்பன்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஷங்கர் இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அவருடைய இயக்கத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. 'நண்பன்' படம் கண்டிப்பாக எனது திரையுலக வாழ்வில் பெரிய படமாக அமையும்." என்று கூறினார்.

அதனையெடுத்து அடுத்த படம் சீமான் இயக்கத்திலா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலா என்று கேட்டனர். அதற்கு விஜய் பார்க்கலாம் என்று கூறினார்.

இயக்குனர் சீமான் விஜய்யின் கால்ஷுட்டிற்காக காத்து கொண்டிருக்க, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு பல தயாரிப்பாளர்கள் இப்போதே நாங்கள் தயாரிக்க முன் வருகிறோம் என்று போன் போட்டு கொண்டிருக்கிறார்களாம்.

ரஜினி வழியில் விஜய்

நடிகர் ரஜினியின் படம் வெளிவந்தால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று தான் பார்ப்பார்கள். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் தனது படங்களான 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' உள்ளிட்ட பல படங்களின் வரவேற்பின்  மூலம் விநியோகஸ்தர்கள் ரஜினியை அடுத்து விஜய் படம் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்று பேசி வந்தார்கள்.

அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் ரஜினி தனது படங்களில் பண்ணும் ஸ்டைல், வசனங்கள் என  பலவற்றை தனது படங்களில் பின்பற்றினார்.
'போக்கிரி' படத்தில் வரும் 'நீ அடிச்சா பீஸ்... நான் அடிச்சா மாஸ்','ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' ஆகிய வசனங்களும், 'வேட்டைக்காரன்' படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஆட்டோ டிரைவராக நடித்ததும் இதற்கு சான்று.


ரஜினி நடித்த 'முத்து' படம் சீனாவிலும் வெளியானது. அப்படத்தின் மூலம் சீனாவிலும் அவருக்கும் ரசிகர்கள் உருவாகினர். 'முத்து' படத்தை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சீனாவிலும் வெளியானது.

தற்போது விஜய் நடித்த 'காவலன்' படம் சீனாவில் ஹாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது. 'காவலன்' படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பையும் , காமெடியையும் வெகுவாக ரசித்தனர்.

'காவலன்' படத்திற்கு ஹாங்காயில் கிடைத்த வரவேற்பால் ரஜினியை போலவே தனது படங்களையும் சீனாவில் வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறாராம் விஜய். அதிலும் விஜய்யின் அடுத்து வெளிவர இருக்கும் படங்கள் கண்டிப்பாக சீனாவில் வெளியாகும் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

"விஜய்யை கிண்டலடிக்கவில்லை" சொல்கிறார் உதயநிதி



vijay-uthayanidhi-22-06-11
ராஜேஸ் படம் என்றாலே ரஜினி, கமல் என்று அனைவரையும் மானாவாரியாக கலாய்ப்பார்கள். உதாரணம்: சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன். தற்போது ராஜேஸ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே). இப்படத்தில் அது போன்ற கலாய்க்கும் காட்சிகள் இருக்கிறதா? முக்கியமாக விஜய்யை கிண்டலடிப்பது போன்ற காமெடி காட்சிகள் இருக்கிறதா என்று கேட்க பட்டபோது "இல்லை இப்படம் முழுக்க முழுக்க காமெடி படம்தான் ஆனால் யாரையும் கிண்டலடிவில்லை" என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

விஜய் ஹீரோயின் ஆகிறார் சோனம் கபூர்

vijay-sonam-kapoor-23-06-11


சோனம் கபூரை ஒரு வழியாக தமிழுக்கு வரவழைத்து விட்டார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இணையதளத்தில் முருகதாஸ் விஜய் புராஜெக்ட் பற்றி கூறியிருந்தோம். தற்போது மேலும் பல விசயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இபடத்திற்கு ஹீரோயினாக, பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சாவரியா, டெல்லி6 போன்ற பிரபல ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இசை முருகதாஸின் ராசியாக கூட்டணியாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

Wednesday, June 22, 2011

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்


விஜய் இன்று தனது பிறந்த நாளன்று இக்மோர் அரச வைத்தியசாலைக்கு மனைவி சங்கீதாவுடன் சென்று இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.இந்த நிகழ்வில் ஜெயம் ராஜாவும் பங்குகொண்டார். ராஜன் கண் நிலையத்துக்கு சென்று கண் தானத்தையும் தொடங்கி வைத்தார்.அதிகளவான ரசிகர்கள் விஜயை பார்க்க சூழ்ந்து கொண்டனர்.
 

தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் மிகப்பிரபலமானவராகவும் அதிகளவான ரசிகர்களை கொண்டவராகவும் விஜய் காணப்படுகின்றார். விஜய்க்கு அதிகளவான சிறுவர்களும் பெண்களும் ரசிகர்களாக உள்ளனர். விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன.விஜய் ஒவ்வொரு பிறந்த நாளிலும் பல பணிகளை செய்வதுடன் தினமும் தனது இயக்கம் மூலம் பல பணிகளை செய்கின்றார் .இளைய தளபதி என அழைக்கப்படும் விஜய்க்கு டாக்டர் எனும் பட்டமும் உள்ளது பல விருதுகளை வென்ற விஜயைக்கு விரைவில் தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள். இவ்வாறு சிறப்புடைய விஜய்க்கு எமது வலைப்பூ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

Tuesday, June 21, 2011

விஜயின் பிறந்தநாள் அறிக்கை

நடிகர் விஜய்க்கு நாளை (புதன்கிழமை) தனது பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இப்பிறந்த நாளையொட்டி தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறிப்பிட்டதாவது

"எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.

இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும்.''

என்று அவ்வறிக்கையில் கூறிப்பிட்டுள்ளது.

விகடன் மேடையிலும் குறையாத விஜய்யின் பஞ்ச் வசனங்கள்..



‘காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?”
”எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நான், ‘மக்கள் இயக்கம்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அப்போ இருந்தே எங்கள் இயக்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு சமூக நற்பணிகளைச் செஞ்சுட்டு இருக்காங்க. லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டப்போ, அதுக்கு மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தோம். மீன் பிடிக்கப்போன தமிழர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்றதைக் கண்டிச்சு நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இது மாதிரி எத்தனையோ விஷயங்களை சமூக அக்கறையோட செய்திருக்கோம். எவ்வளவோ உதவிகளை, நல்ல விஷயங்களை தமிழ்நாடு முழுக்கச் செய்துட்டே தான் இருக்கோம். இதுல சுயநல அரசியல் எங்கே இருக்குங்க? மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப்போடுற மாதிரிதான், சில பேர் ‘காவலன்’ பட ரிலீஸ் பிரச்னையையும் அம்மாவை நான் ஆதரிச்சதையும் சம்பந்தப்படுத்திப் பேசுறாங்க!”
பி.கீர்த்தனா, காரைப்பட்டி.
”வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?”
” ‘இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’னு ஊர் உலகமே சொல்ற புரட்சித் தலைவரைப் பார்த்து!”
அ.யாழினி பர்வதம், சென்னை.
”அமோக வெற்றி பெற்ற அம்மாவைச் சந்தித்த அனுபவம்பற்றி?”
”வெற்றி முகத்தோடு இருக்காங்க. சிரிச்ச முகத்தோடு பேசினாங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும்கிற வேட்கை அந்த வேங்கையின் முகத்தில் தெரிஞ்சது!”
சு.சங்கர், போத்தனூர்.
”உங்களுக்கு பைக் ரைடிங் பிடிக்குமா? ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பைக்கை எடுத்துக்கொண்டு எங்கே செல்வீர்கள்?”
”ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நான் பைக் பைத்தியம். நான் வேகமா பைக் ஓட்டுவேன்னு பயந்து, அப்பா காரில்தான் காலேஜுக்கு அனுப்புவார். இப்போகூட சிட்டிக்குள் ஷூட்டிங்னா, ஹெல்மெட் மாட்டிக் கிட்டு பைக்லயே கிளம்பிப் போயிருவேன். அப்பப்போ, ஈ.சி.ஆர். ரோட்டில் கடற்கரைக் காற்று வாங்குறதுக்காக பைக் ரைடிங் போவேன். மக்கள் மனநிலையை அறிவதற்காக, ஹெல்மெட் மாட்டிக்கொண்டு மார்க்கெட், தியேட்டர், பஸ் ஸ்டாப்களில் பைக்கில் சுற்றி வந்திருக்கேன்!”
ஜி.குப்புசாமி, விழுப்புரம்.
”வெளிநாட்டில் நீங்கள் அடிக்கடி செல்லும் இடம் எது… ஏன்?”
”லண்டன். அது ஏன் என்பது உங்களுக்கே தெரியுமே!”
கே.மணிபாலா, ஆரணி.
”முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது எது? டாக்டர் கலைஞரிடம் பிடித்தது எது?”
”முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். கலைஞரிடம் பிடித்தது அவருடைய இலக்கியம்!”
ஆர்.வினோத்குமார், சென்னை.
”சினிமா, அரசியல் தவிர உங்களுக்கு ஆர்வமான வேறு துறை எது?”
”கிரிக்கெட்!”
வை.ஆ.சுரேஷ், துறையூர்.
”உங்களோடு போட்டோ எடுக்க ஆசை ஆசையா நிறையப் பேர் வருவாங்க. இவரோடு போட்டோ எடுத்துக்கவில்லையேனு நீங்க ஆசைப்பட்ட யாராச்சும் உண்டா?”
”கருணை உள்ளத்தால்… சமூக சேவையால்… உலகையே தன்வசம் ஈர்த்தவர் அன்னை தெரசா. அவங்க பக்கத்தில் நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு வாய்ப்பு கிடைக்கலை!”
கே.சுகுணா, மதுரை.
”உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் எது?”
”வள்ளலார் சொன்ன ‘விழித்திரு, தனித்திரு, பசித்திரு!”
எஸ்.சிவஞானம், செய்யாறு.
”சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதுபற்றி..?”
”நிறுத்திவைக்கப்படவில்லை. மேலும் செழுமையாக்குவதற்காகத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது!”
ச.குமார், வந்தவாசி.
”கல்லூரி படிக்கும்போது காதல் வந்திருக்கா? அதை எங்ககிட்ட சொல்ல முடியுமாங்ணா..?”
”காதல் உண்டுங்ணா. ஆனா, இப்போதைக்குச் சொல்ல முடியாதுங்ணா!”
எஸ்.நாராயணன், சென்னை.
”எவ்வளவு கடினமான நடன அசைவுகளாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அனாயாசமாக ஆடிவிடுகிறீர்களே, அதன் ரகசியம் என்ன விஜய்?”
”இதில் ரகசியம் எதுவும் இல்லை. உங்கள் வெளிப்படையான கைத்தட்டல்தான் காரணம்!”
பாரதி, சேலம்.
”நீங்கள் நெடுநாளாகச் சந்திக்க விரும்பும் நபர் யார்?”
”சேலம் பாரதி, உங்களைத் தான்!”
எம்.சங்கர், திருச்சி.
”தியேட்டரில் வந்து படம் பார்த்து இருக்கிறீர்களா? சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்?”
”அடிக்கடி தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பேன். சமீபத்தில் ‘கோ’ படம் பார்த்தேன். தியேட்டருக்கு நான் வருவதும் தெரியாது… போவதும் தெரியாது!”
துரை சுப்ரமணியம், திருச்சி.
”தளபதியே, கடந்த தேர்தலில் நீங்கள் ஏன் வெளிப்படையாக அ.தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய வரவில்லை? அறிக்கைகூடத் தரவில்லையே?”
”நான் வேறு… என் மக்கள் இயக்கம் வேறு இல்லை. நான் என் மனசில் என்ன நினைச்சேனோ… அதைத்தான் என் அப்பா பிரசாரம் செய்தார். என்னோட மக்கள் இயக்கத் தொண்டர்களும் என் எண்ணத்தைப் புரிஞ்சுக் கிட்டு செயல்பட்டாங்க!”
ஆ.செந்தில்குமார், காஞ்சிபுரம்.
”ஒருவரின் பலம், பலவீனம் என்ன?”
”பலவீனத்தைப் புரிந்துகொண்டால் பலம். பலத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால் பலவீனம்!”
க.சிவாஜி மூக்கையா, தர்க்கால்.
” ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கு’ன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, அவங்களைச் செயல்பட விடுறது இல்லையே?”
”அது உண்மைதாங்ணா. இளைஞர்களை உற்சாகப்படுத்தச் சொல்றதோட சரி… பெரும்பாலான குடும்பங்களில் தனக்கு ஆர்வம் உள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க இளைஞர்களுக்குப் பெற்றோர்களே தடையா இருக்காங்க. ‘இதில்தான் ஃப்யூச்சர் இருக்கு’ன்னு பெத்தவங்க தங்களோட விருப்பத்தைப் பிள்ளைங்க மேல திணிக்கிறாங்க. இதனால பிடிக்காத துறையைப் படிக்கிற இளைஞர்களால் எதிர்காலத்தில் பிரகாசிக்க முடியாமப் போயிடுது. இளைஞர்கள் தங்களோட எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கிற மாதிரி பெத்தவங்க வழிவிடணும். அப்போதுதான் ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்கிற வாசகம் நடைமுறையில் வரும். சரிங்களா?”
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
”ஒரு படத்தின் வெற்றி, தோல்விக்கு யார் காரணம்? ஹீரோவா, டைரக்டரா?”
”படத்தின் கதை, இயக்குநர் இரண்டு விஷயங்கள்தான்!”
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
”சினிமாவில் உங்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?”
”சினிமாவில் நிறைய்ய்ய்ய்ய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு ஒரு பட்டியல் எழுதினா, அன்னிலேர்ந்து  இன்னிக்கு வரை என்கூடவே இருக்கும் காலேஜ் நண்பர்கள்தான் பாஸ்!”
சு.சங்கர், போத்தனூர்.
”கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”
”மனைவி மட்டும் அல்ல… ரசிகர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். அவங்களை வெறுமனே சினிமாவுக்கு பேனர் கட்டும் ரசிகர்களாக இல்லாமல், மக்கள் இயக்கத் தொண்டர்களாக மாற்றி இருக்கேன். அவங்களை இன்னும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும். அவங்களுக்கு சமுதாயத்தில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கணும். நாலு பேருக்கு நல்லது செஞ்சா, நமக்கான மரியாதை தானே கிடைக்கும். அதுதான் என்னோட அடுத்த இலக்கு!”
அ.பிரபாகரன், சேலம்.
”சாதிகள் ஒழியாதா?”
”சாதியை மையமாவெச்சு அரசியல் நடத்தினவங்களுக்கு, இந்தத் தேர்தல்ல மக்கள் மரண அடி கொடுத்து இருக்காங்க. சாதி நம்மை மீண்டும்  கற்காலத்துக்கு அழைச்சுட்டுப் போயிடும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுடும். மக்கள் விரும்பறது ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன பாரதியாரின் வரிகளைத்தான்!”

Monday, June 20, 2011

"விஜய்யிடமிருந்து நான் விலைக்கு வாங்கவில்லை"



vijay-vijay-antony-20-06-11
சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டைப்பற்றி ஒன்றுக்கு பல முறை மீடியாக்களில் தகவல்கள் வந்து விட்டது. விஜய் தன்னுடைய‌ வீட்டை, விஜய் ஆன்டனிக்கு  விற்று விட்டார் என்றும், அதற்கு காரணம் ஜோதிடரின் ஆலோசனைதான் என்றும் பல செய்திகள் பல முறை மீண்டும் மீண்டும் உலவிக் கொண்டே இருக்கின்றது.

இது பற்றி சொல்லும் விஜய் ஆண்டனி "நான் வீடு கிடைக்காமல் தேடிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு, எஸ் ஏ சந்திர சேகர் அவர்கள், அவர்களாகவே என்னை அழைத்து விஜய்யின் வீட்டை குறைந்த வாடகைக்கு எனக்கு கொடுத்தார்கள். எனக்கு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கும் சந்திரசேகர் அவர்கள் இந்த உதவியையும் செய்திருக்கிறார். மற்றபடி நான் விஜய் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டேன் என்பதெல்லாம் வெறும் வதந்தி" என்று கூறியிருக்கிறார்.

Sunday, June 19, 2011

விஜய் பெற்ற விருதுகள்!

1998- தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை)
1998 – தமிழக அரசின் கலைமாமணி விருது
2000- தமிழக அரசின் எம்ஜிஆர் விருது
2004- சென்னை கார்ப்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது (கில்லி)
2004-தினகரன் சிறந்த நடிகர் விருது (கில்லி)
2004-பிலிம்டுடே சிறந்த நடிகர் விருது (கில்லி)
2005-பொது சேவைக்கான வெள்ளிப் பதக்கம்
2005- திருப்பாச்சி படத்துக்காக தமிழக அரசு சிறப்பு விருது
2006- டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ‘நாளைய சூப்பர் ஸ்டார்’ விருது
2007-விஜய் டிவி விருது – எண்டர்டெயினர் ஆப் தி இயர் – போக்கிரி / அழகிய தமிழ்மகன்
2007-அம்ரிதா மாத்ருபூமி சிறந்த நடிகர் விருது (போக்கிரி)
2007- எம்ஜிஆர் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
2008-இசையருவி சிறந்த நடிகர் விருது (போக்கிரி)
2009- விஜய்டிவி மக்கள் விரும்பும் நடிகர் விருது – வேட்டைக்காரன்
2009-இசையருவி – மக்களின் அபிமான நடிகர்
2010- ஏசியா நெட் சிறந்த பிரபல நடிகர்

இவை தொடர்பான படங்கள்