Tuesday, June 14, 2011

வேலாயுதம் இசைவெளியீடு ஜூலை 5


விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம் இப்படத்தின் இசைவெளியீடு எப்பொழுது எனக்காத்துக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இப்படத்தின் இசை வெளியீடு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் கடந்த இரண்டு மாதமாக வந்த வண்ணம் இருந்தன ஆனால் இன்று ஜூலை 5 ம் திகதி பாடல் வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.
விஜயின் படங்களில் பாடல்கள் முக்கியம் பெறுகின்றன அந்த வகையில் இப்பட பாடல்களும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன விஜயின் இப்படத்துக்கு விஜய் அன்டனி இசையமைத்துள்ளார் இப்பாடல்களை இன்னும் இரு வாரங்களில் கேட்கலாம். குத்து ரொமான்டிக் மாஸ் பாடல் தீம் மியூசிக் என மொத்தம் 7 பாடல்கள் உள்ளன.இதில் எல்லாப்பாடல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படாமல் அமையவுள்ளன.
இப்படத்தின் சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது என்ற பாடலை 2 கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.இப்படத்தின் பாடல் வரிகளை ஏற்கனவே தந்திருந்தோம் எனினும் இப்பட பாடல் வெளிவர உள்ளமையால் மீண்டும் தருகிறோம்.
1) சொன்ன புரியாது சொல்லுக்குள் அடங்காது
2) மயக்கி புட்டான்
3) ரத்ததின் ரத்தமே
4) மஞ்ச நதி மரத கட்ட
5) ஹன்சிகாவுடன் ஒரு மெலொடி
6) வேல வேல வேலயுதம்
7) தீம் ஸோங்
என்பனவாகும் விஜயின் பிறந்த நாளன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து வைக்கவுள்ளார் அது என்னவென்று விரைவில் அறிவிப்போம் . எதிர்பாருங்கள் விரைவில்

0 comments:

Post a Comment