Wednesday, June 8, 2011

மக்கள் இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார் விஜய்

ஜீன் 22 இளைய தளபதி விஜய் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
என் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ஏழை எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்து சமூக நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் படி இம்மாதம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நாடு முழுவதும் நற்பணிகளை செய்தவண்ணம் இருக்கிறார்கள். வடசென்னையில் ஒரே நாளில் 10 இளைய தளபதி மக்கள் இயக்கத்தினர் ஒன்றிணைந்து கொருக்குப்பேட்டை, அண்ணாநகரில் 150 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டும் 75 பேருக்கு இலவச புடவையும், கம்பெனி அருகில் 100 மாணவ, மாணவிகளுக்கு 100 பாட புத்தகமும், தண்டையார்பேட்டை பஸ் டெப்போ அருகில் 75 பேருக்கு இலவச வேட்டி சேலையும், பாண்டியன் தியேட்டர் அருகில் விஜய் படம் பொறித்த 100 ஸ்கூல் பேக், எழுது பொருள்களும் வழங்கப்பட்டன.

தசரதபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட குழந்தைகள் மையத்தில் 60 குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. இதே போல் பார்ணேசன் நகரில் 75 பேருக்கு இலவச புடவை வேட்டி, கே.சி.எஸ் கல்லூரி அருகில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், 60 பேருக்கு புடவை, கைலி, இளையமுதலி தெருவில் 50 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, ஆரணிங்கன் தெருவில் மாணவர்களுக்கு 60 ஸ்கூல்பேக், இரவு பாட சாலை மாணவர்கள் கணணி பயில இலவச கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.

முதல் இடத்தைப் பிடித்த அரசு மேனிலைப்பள்ளி 10 மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வழங்கினார். அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பயன்பெறும் விதத்தில் சமூகப் பணிகள் செய்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. விஜய்யின் வேண்டுகோளை ஏற்று அரும் பணியாற்றும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். மேலும் உதவிப்பணிபளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். விஜய் பிறந்த நாளன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவில் நற்பணிகள் செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த், துணைத் தலைவர் ஜி.பாஸ்கர், செயலாளர் ஆர்.ரவிராஜா, இயக்க நிர்வாகிகள் ஏ.சி.குமார், சி.ராஜேந்திரன், கலந்து கொண்டார்.

0 comments:

Post a Comment