Friday, June 10, 2011

வேலாயுதம் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில்


விஜயின் வேலாயுதம் படம்பற்றிய செய்திகளை தந்து கொண்டிருக்கும் எமது இணையத்தளம் வேலாயுதம் படத்தின் சுவாரஸ்யமான செய்தியை தருகிறோம்.இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் ஸ்ரேடியமில் நடைபெறுகிறது.ஆயிரம் ஜீனியர் நடிகர்களை வைத்து படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கிவருகிறார் ஜெயம் ராஜா.இறுதியாக வேலாயுதம் படத்தின் கிளைமைக்ஸ் காட்சி சென்னையில் படமாக்கி முடிக்கப்பட்டது.விஜய் இப்படப்பிடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் பங்குகொள்கிறார்.இப்படத்தில் ஜெனிலியா ஹன்சிகா என இரண்டு ஜோடிகள் விஜயுடன் நடிக்கின்றனர்.இப்படத்தின் இறுதி இசையமைப்பு வேலைகள் லண்டனில் இடம்பெறுகின்றன.இப்படத்தின் பாடல்களை சீடியில் பதியும் வேலை ஆரம்பமாகி இடம்பெறுகிறது.இப்படத்தின் பாடல் விரைவில் வெளிவர உள்ளது.திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வெளிநாட்டுக்கு பாடல் காட்சி ஒன்று படமாக்க செல்லவுள்ளனர்.வேலாயுதம் 2011 இன் சிறந்த படமாக வெளிவர உள்ளது.

0 comments:

Post a Comment