Thursday, June 2, 2011

நண்பன் வெளியீட்டுத்திகதி உறுதியாகியது


தீபாவளிக்கு நண்பன் திரைப்படம் வெளியாகும் என உறுதியாகவும் உத்தியோக பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஜீவா சிறீகாந்தின் நடிப்பில் சங்கர் இயக்கும் நண்பன் திரைப்படம் இவ்வருட தமிழர்களின் திருநாள்களில் ஒன்றாகிய தீபாவளிக்கு வெளிவர உள்ளது.
ஹிந்தி பிளாக் புஸ்டர் படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி தெகிரான் சென்னை அந்தமான் ஆம்ஸட்டாம் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இதுவரை இடம்பெற்றுள்ளது. நண்பன் படத்தின் பெரும்பாலன படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ள  நிலையில் சங்கர் இப்படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகளை தொடங்கவுள்ளார் எனக்கூறப்படுகிறது.
இப்படம் சங்கரின் முதலாவது ரீமேக் படமாக இருப்பதால் மிகவும் கவனமாக இப்படத்தின் புரடெக்ஸன் வேலைகளை தொடங்க உள்ளார்.இதனால் இவ்வேலைகளுக்காக நிறைய நாட்களை ஒதுக்கியுள்ளார் சங்கர்.
இப்படத்தில் இலியானா கரீனா கபூர் நடித்த ரோலில் நடிக்கிறார்.இவரது தந்தையாகவும் காலேஸ் பேராசிரியராகவும் வருகிறார் சத்தியராஜ்.இலியானாவின் அக்காவாக வருகிறார் அனுஜா.

0 comments:

Post a Comment