
இதற்கிடையில் வேலாயுதம் படத்தை ஜூலை நான்காவது வாரம் வெளியிட முடிவு செய்திருகிறார்களாம். தீபாவளி வரை விஜய்க்கு படங்கள் தயாராகிவிட்ட நிலையில் அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பகலவனை வெளியிடலாம் என்பது ஏற்கனவே எஸ்.ஏ.சி, விஜய், சீமான், தாணு ஆகிய நான்குபேரும் முடிவு செய்து வைத்திருந்ததாம். ஆனால் தற்போது முழுவதும் குழம்பிப் போய் இருகிறார் விஜய் என்கிறார்கள்.
காரணம் பகலவன் படத்தை உடன் தொடங்கினால், விஜலட்சுமி விவகாரத்தில் சிமானால் மனச்சோர்வு இல்லாமல் செயல்பட முடியுமா என்று யோசிக்கிறார்களாம் இந்த நான்குபேரும். இதை சீமானிடமே பேச இருக்கிறாராம் விஜயின் அப்பா.பகலனுக்கு இப்படியொரு பின்னடைவு வரும் என்று எதிர்பார்க்காத இயக்குனர்கள் பூபதி.பாண்டியன், பேரரசு இருவரும் வேலாயுதம் கடைசிகட்ட படப்பிடிப்பு பின்னி மில்லில் நடந்தபோது விஜய்க்கு கதை சொல்லியிருகிறார்கள்.
அடுத்து விஷாலை இயக்க இருந்த பூபதிப்பாண்டியன் விஜய் ஓகே சொன்னால் விஷாலை டீலில் வைக்கலாம் என்று திட்டமிட்டாராம். ஆனால் பேரரசுவின் கதையை ஓகே சொன்ன விஜய், தயாராக இருங்கள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவேன் என்று பேரரசுக்கு சொல்ல, இப்போது அவர் “ என்னோட அடுத்த படம் விஜயுடந்தான் ‘ என்று தைரியமாகச் சொல்ல ஆரம்பித்து இருகிறாராம் கோலிவுட்டில்.
0 comments:
Post a Comment