ஜனரஞ்சகமான வெகுஜன படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தை வென்றவர் விஜய். உலகப்பட விழாக்களுக்கு அனுப்புகிறமாதிரி விஜய் இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.
ஆனால் சித்திக் இயக்கிய காவலன் திரைப்படம் நல்ல காதல்கதை என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்தப்படம், 14-வது ஷங்காய் உலகத்திரபட விழாவில் திரையிட அப்பீஸியலாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கு முயற்சி எடுத்தவர் சீனாவின் தலைநகர் ஷங்காயில் வாழ்ந்துவரும் தமிழரான திருமதி. ரேக்ஸ் என்கிறார்கள்.
தற்போது நடைபெற்றுவரும் ஷாங்காய் திரைப்பட விழாவில் காவலன் நேற்று (11.06.2011- ஞாயிறு) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில சீன மொழி சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டப் பட்ட இந்தப்படத்தை சீன ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக, ஒவ்வொரு காட்சியையும் ஆழமாக ரசித்ததுப் பார்த்தார்களாம். இதுபற்றி விஜய் மக்கள் தொடர்பாளர் தரும் செய்தியில் “ காவலன் படத்தின் காமெடி காட்சிகளில் சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அதேபோல படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள், கண் கலங்கி அழுதார்கள்.

படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். உண்மையில் எனக்கு புது அனுபவமாக இருந்தது” என்று விஜய் நெகிழ்வுடன் சொல்லியுள்ளதாக குறிப்பிடுகிறார். மேலும் காவலன் படத்தை சீன ரசிகர்கள் பார்த்து முடிந்ததும், அவர்கள் மத்தியில் விஜய் பேச அழைக்கப்படிருக்கிறார். விஜயின் பேச்சை சீனமொழியில் மொழிபெயர்த்து சொன்னார்களாம். விழாவில் விஜய் பேசியது இதுதான்…
“ வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் நான் கலந்துக் கொள்வது இதுதான் முதல்முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம். நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதை உங்கள் ரசனை மூலம் தெரிந்து கொண்டேன். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி என்னை நீங்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.
உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக எங்கள் தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன், இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். " என்று பேசியிருக்கிறார்.
இளைய தளபதி விஜய்யின் இந்த பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டியிருகிறார்கள். விஜய் பேசிவிட்டு புறப்படும்போது தமிழ், மலையாள ரசிகர்களைப் போலவே அவரை சூழ்ந்து கொண்டார்களாம் சீன ரசிகர்கள். குறிப்பாக சீன பெண் ரசிகைகள் விஜயிடம் ஆட்டோ கிராஃப் வாங்குவதிலும் படமெடுத்துக்கொள்வதிலும் அதிகம் ஆர்வம் காட்டியிருகிறார்கள்.
1 comments:
Engal thalapathy Tamil Cinema mattrum Tamil nattukum perumai serthirukirar . Thalapathy rasigai endru solvathai naan gouravamaga ninaikiraen. Thalaiva sekiram velayutham release pannunga.
Advance Birthday Wishes to My favourite Hero Vijay
Post a Comment