Saturday, June 11, 2011

பகலவன் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு


தற்பொழுது இயக்குனர் சீமான் பகலவன் பட திரைக்கதை அமைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இது ஒரு சமூக சேவை மற்றும் சமூக நல்லெண்ணம் கொண்டபடமாக அமையவுள்ளது.விஜய் காவலன் படம் வெளிவந்த போது அளித்த பேட்டியில் நான் வருடத்துக்கு குறைந்தது இரு படம் பண்ணுவன் ஒன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் மற்றது மசாலா படம் என்றார் அந்த வகையில் இப்படம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படமாக உள்ளது.இளைய தளபதி விஜய் இப்படத்தில் நடிக்கிறார் இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் இப்படத்தில் விஜய்க்கு இரு நாயகிகள் மற்றவர் யார் என்று தெரியவில்லை ஆனால் பாவனா நடிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தம்பி படத்துக்கு பிறகு மிகவும் அருமையான படத்தை உருவாக்கியுள்ளார் சீமான்.ஜெயம் ராஜாவின் வேலாயுதம் படத்தில் விஜயும் ஹன்சிகாவும் ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருக்கின்றனர்.இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.அதன் பின் பகல்வன் 2012 ம் ஆண்டு பொங்கலில் வெளியிடும் வகையில் தொடங்கவுள்ளனர்.இப்படத்தில் பாவனா முக்கியமான கரெக்டரில் வருகிறாராம்.இப்படத்தில் இரு கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் இருக்குமாம்.  

1 comments:

Nanpa.......nice work... Best of luckkkk.................... Thalaivar in mass pagalavan..ku best of luck....................

Post a Comment