Wednesday, June 15, 2011

மோத்வானிக்கு டாட்டா ஹன்சிகா மட்டும்

தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 'எங்கேயும் காதல்'  படத்தில் நடித்தார்.

தற்போது விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது பெயரை ஹன்சிகா என்று மாற்றி இருக்கிறாராம்.

இது குறித்த கேள்விக்கு " என் ராசி எண் 9. ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு நம்பர் உண்டு. என் பெயரில் உள்ள 'ஹன்சிகா' வில்  எழுத்துக்களின் நம்பர்களை கூட்டினால் 9 வருகிறது.  ஆகையால் எனது பெயரில் இருந்து மோத்வானியை நீக்கி விட்டேன்" என்று கூறி இருக்கிறார்.

தனது பெயரை மாற்றி விட்டதால் இனிமேல் தனது கால்ஷுட் டைரி நிரம்பி வழியும் என்று ஏக சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

1 comments:

Post a Comment