Thursday, June 9, 2011

நண்பன் இரகசியம் வெளியானது


சங்கரின் நண்பன் படச்செய்திகளை உடனுக்குடன் தரும் நாம் இப்பொழுது நண்பன் படத்தின் இரகசிய விடயம் ஒன்றை சொல்லப்போகின்றோம்.விஜய் ஜீவா சிறிகாந்த் நடிப்பில் மிக வேகமாக வளரும் படம் நண்பன்.இப்படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காகும்.சங்கர் இப்படத்தில் வரும் வட இந்தியா சம்பந்தமான கலாசார சீன்களுக்கு முழுமையாக கட் போட்டுள்ளார் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றங்களை திரைக்கதையில் செய்துள்ளாராம்.நண்பன் படத்தின் கதையை மட்டும் எடுத்த சங்கர் திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளாராம்.அதற்கு ஒரு உதாராணம் தமிழ் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்றது.இதில் 3 இடியட்ஸ் தவிர மேலும் பல கரெக்டர்களும் பங்கு கொண்டனவாம்.சங்கர் மிக அவதானமாக படப்பிடிப்பை நகர்த்தி வருகிறார்.மிகவும் சுவாரஸ்யமாக படத்தை உருவாக்கி வருகிறாராம் சங்கர்.மிகுந்த பக்திபழமாக வருகிறாராம் ஜீவா கரீனாவின் நடிப்பிலிருந்தும் காரெக்டரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட கரெக்டரில் வருகிறார் இலியானா.

0 comments:

Post a Comment