Tuesday, June 28, 2011

தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.

தமிழ் சினிமாவின் இரு சிகரங்கள் மோதிக்கொள்ளப்போகிறார்கள்... ஆமாம் விஜய்- அஜித் இருவரது படங்களும் பல வருடங்களுக்கு பின்னர் ஒரே மாதத்தில்,இரு வாரகால இடைவெளியில் வெளிவரப்போகின்றன. அதுவும் இரண்டுமே அவரவர் ரசிகர்களினதும், ஏனைய சினிமா ரசிகர்களினதும் அதி உச்ச எதிர்பார்ப்புடன் வெளிவருபவை.
ஐந்து படங்களின் தொடர் தோல்விக்குப்பின்னர் காவலன் தந்த வெற்றியின் உற்சாகத்துடன் விஜயும், பில்லா என்ற பெரு வெற்றிக்கு பின்னர் ஏகன், அசல் என்ற இரு படுதோல்விப் படங்களை கொடுத்து எப்படியும் வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற வேகத்துடன் அஜித்தும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜனி -கமலுக்கு அடுத்தபடியான ஜோடிகள், விஜய் - அஜித் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பின்னர் எத்தனையோ இளம் நடிகர்கள் போட்டிக்கு வந்துவிட்ட போதும் இவர்களுடைய படங்களுக்கு உள்ள ஓபனிங் வேறு யார் படத்துக்கும் இல்லை என்பதுதான் நிஜம். இருவரது படங்கள் ரிலீசாகும்போதும் திரையரங்கு பக்கம் சென்று பார்த்தால் புரியும், இருவரது ஓபனிங்கும். பால் ஊற்றப்படும் கட் அவுட்டுகள், தேங்காய் உடைப்புகள், அரங்கு நிறைந்த காட்சிகள் என திரையரங்கே திருவிழாக்கோலம் பூனும். ஓபனிங்கில் மாத்திரமல்ல, இன்றைய காலத்தில் ரஜனிக்கு அடுத்தபடியாக அதிக, அசைக்கமுடியாத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

ஒரு புறம் குழந்தைகள் முதல், பெரியவர் வரை அனைவரது மனங்களையும் கவர்ந்த விஜய். தொடர்ந்து நன்கு படங்கள் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் நடித்துவந்தார். இதுதான் இன்று இவரை எதிர்ப்பவர்கள் விஜய்மேல் கூறும் குற்றச்சாட்டு. அதாவது விஜய் வளர்ந்தது தன் தந்தையின் இயக்கத்தில்தான் என்று. ஆனால் அவை எதுவுமே வெற்றியடையவில்லை.
விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய, அவரது முதல் வெற்றிப்படம் “பூவே உனக்காக” விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்தது. அதைவிட காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவை விஜயின் இன்றைய வெற்றிக்கான அடித்தளங்கள். பிரியமுடன், கன்னுக்குள் நிலவு ஆகிய இரு மாறுபட்ட , வித்தியாசமான பாத்திரத்தை ஏற்றதோடு நிறுத்திவிட்டு அதன் பின்னர் தனக்கான ஒரு பாதையை வகுத்து காதல், ஆக்ஸன் இரண்டிலும் வெளுத்து வாங்கி வருகிறார். இன்று ரஜனிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களைக்கொண்ட ஒரேயொரு நடிகராக விஜய் மட்டுமே உள்ளார். தமிழ்நாட்டில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர் மன்றங்கள். கேரளாவில் ஒரு படி மேலே போய் விஜய்க்கு சிலை வைக்கும் அளவிற்கு ரசிகர் பட்டாளம். ஐந்து தோல்விப்படங்கள் கொடுத்தும் முன்னனி இடத்தை தக்கவைத்துக் கொண்டு அடுத்த ஒரு வெற்றியில் அந்த ஐந்து படங்கள் கொடுத்த தோல்வியை மறக்கடித்து மறுபடியும் தனக்கான முன்னனி இடத்தை நிலைனிறுத்தியுள்ள இளையதளபதி விஜயும்,

மறுபுறம், அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, திரைத்துறைக்குள் யாருடைய ஆதரவுமின்றி நுழைந்த அஜித். அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையாயினும் அப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. முன்னதாக 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி சிறந்த புதுமுகத்திற்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். ஆசை, காதல் மன்னன் ஆகிய படங்கள் இன்றும் பார்க்கத்தூண்டும் சிறந்த படங்கள். ஆசை அஜித்தின் முதலாவது வெற்றிப்படமாக அமைந்தது. தனது ஐந்தாவது படமாக ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு சிறிய வேடத்தை ஏற்றிருந்தார். அப்போது யாரும் அஜித் இந்தளவு பெரிய நடிகராக வருவார் என நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு, பில்லா என மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிக்காட்டி வருபவர். விஜய்க்கு நிகரான ரசிகர்களை கொண்டவர்(அண்மையில் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து தான் நிஜத்திலேயே ஒரு ஹீரோ என்பதை நிரூபித்தவர்)

இருவரும் முதலில் மோதிக்கொண்ட காலப்பகுதி 2001 ஆம் ஆண்டு. விஜயின் ப்ரண்ட்ஸ் திரைப்படமும் அஜித்தின் தீனா திரைப்படமும் மோதிக்கொண்டன. இரண்டுமே பெரு வெற்றி பெற்ற படங்கள். விஜய் தன்னை காதல்,சென்டிமென்ட் ஹீரோவாகவும், அஜித் விஜய்க்கு நிகரான மாஸ் ஹீரோவாகவும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார்கள்.
அதன் பின்னர் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என மோதிக்கொண்டார்கள்.
இப்போது மோதப்போவது வேலாயுதம், மங்காத்தாவுக்காக
அதுவும் வெற்றி, தோல்விகள், அது தந்த வடுக்கள் என சகல விதத்திலும் பக்குவப்பட்ட நிலையிலேயே இருவரும் மோதப்போகிறார்கள். கட்டாயம் இந்த மோதல் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் விஜயும் சரி, அஜித்தும் சரி, தம்மை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். தவிர வேலாயுதம் இயக்குனர் ராஜாவிற்கும், மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் இறுதிப்படங்கள் தோல்வியே. ஆகவே இருவரும் தங்களை நிரூபிக்கவேண்டிய்ட தேவை உள்ளது.

0 comments:

Post a Comment