Monday, January 14, 2013

விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான்: துளசி நாயர்

பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர், கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் துளசி நாயர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது.
இது குறித்து துளசி நாயர் கூறுகையில்: நான் விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை.
கடல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு தயாராகுவதற்காக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை பத்து தடவை பார்த்தேன்.
அந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் அம்மாவின்(ராதா) கெமிஸ்ட்ரியை கண்டு இன்றும் வியப்படைகிறேன் என்றார்.

0 comments:

Post a Comment