Wednesday, January 2, 2013

மும்பை, ஸ்பெயினில் தளபதியின் படப்பிடிப்பு

துப்பாக்கி வெற்றிக்குப் பின்னர் விஜய், ஏ.எல். விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 2013, 9ம் திகதி தொடங்குகிறது.

மும்பையில் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது.

முன்னதாக முதற்கட்டப் படப்பிடிப்பின் பெரும்பாலான காட்சிகளும் மும்பையில்தான் எடுக்கப்பட்டது.

இதனிடையே இயக்குனர் விஜய் ஸ்பெயின் சென்று படப்பிடிப்பிற்கான இடங்களை பார்த்து திரும்பியுள்ளார்.

எனவே படத்தின் பாடல் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்படலாம் என தெரிகிறது

0 comments:

Post a Comment