இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'தலைவா' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
இப்படத்திற்கு ஏற்கனவே தலைவன் மற்றும் தங்கன் மகன் போன்ற தலைப்புக்களை வைத்த போது சர்ச்சைகள் ஏற்படவே அத்தலைப்புக்களை நிராகரித்தார் இளைய தளபதி. இந்நிலையில் சினிமா ஆய்வாளாரான ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டரில் கருத்து வெளிடுகையில், விஜய்- விஜய் படத்திற்கு 'தலைவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் மாஸாக இருப்பதை உணரமுடிகிறது என விஜயின் நாயகி அமலா பால் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அமலா பால் தனது ட்விட்டரில், விஜய்- விஜய் படத்திற்கு 'தலைவா' என பெயரிடப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வமானது என தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
0 comments:
Post a Comment