Friday, April 15, 2011

நண்பன் படத்தில் பெரிய மாற்றம் இல்லை - சங்கர்


ஹிந்தி மெகாகிட் படத்தின் தமிழ் ரீமேக் நண்பன் படமாகும்.இது பற்றி இயக்குனர் சங்கர் கூறிய போது இப்படத்தில் பெரிய மாற்றம் எதும் செய்யவில்லை.ஹிந்தி 3 இடியட்ஸை தமிழுக்கு ஏற்றமாதிரி மாற்றியுள்ளேன் சிறிய சிறிய மாற்றத்தை காணலாம்.ஆனால் தொழிநுட்ப முயற்சி பல படத்தில் உண்டு எனக்கூறினார் சங்கர்.
நான் எந்திரன் படத்துக்காக பூனேக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தோம் சில காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு ஒரு நாள் ரத்துச்செய்யப்பட்டது.அந்த நேரம் நாம் ஹிந்தி 3 இடியட்ஸை தியேட்டருக்கு சென்று பார்த்தோம் .இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.தமிழில் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.இப்படம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததுடன் திரைக்கதையும் சிறப்பாக இருந்தது.இந்தப்படத்தின் ஒரியினல் திரைக்கதை சிறப்பாக இருந்ததால் பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை.இது தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி சிறப்பாக அமையும் என்றார் சங்கர்.  

0 comments:

Post a Comment