Saturday, April 2, 2011

விஜயின் வெற்றி ரசிகர்களின் வெற்றி

விஜய் நடிப்பில் இறுதியாக வந்த படம் காவலன் பல தடைகளை தாண்டி இப்படம் வெளியாகியது.எப்பொது வெளியாகியிருக்க வேண்டிய படம் ஆனால் பலரின் இடையூறுகளுக்கு முகம் கொடுத்து இப்படம் வெளிவந்தது.இப்படம் வெளிவரும் போதும் கூட எந்த விதமான விளம்பரமும் இன்றி  வெளியானது.படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அனைவரும் வியந்தனர்.இதனால் அதன் பின் விஜய் அசின் என காவலன் படக்குழுவினரை அழைத்து பல நிகழ்சிகளை கொண்டாடினர்.
விஜயின் 50 வது படம் அடைந்த சறுக்களும் அதற்கு முன் வெளியாகிய வில்லு அழகியதமிழ்மகன் ஆகிய படங்கள் அடைந்த தோல்வியாலும் விஜய்க்கு ரசிகர்கள் குறைந்து விட்டார்கள் விஜய் நிலை அதோ கெதி தான் என்று நினைத்தவர்களுக்கு காவலன் ஒரு சவுக்கடியாக அமைந்தது.
விஜயின் படங்கள் அனைத்தும் ஒரே போர்மிலாவில் வந்து கொண்டிருக்கின்றன என விமர்சனக்களும் விஜய்க்கு நடிப்பு வராது எனவும் எள்ளி நகையாடியோர் காவலனுக்கு நல்ல விமர்சனத்தை வழங்கினர்.
காவலன் அனைத்து ரசிகர்களாலும் விரும்பி ரசிக்கப்பட்டது இப்படம் இலங்கை இந்தியா மலேசியா ஐரோப்பிய நாடுகளில் 25 நாளை கடந்து ஓடியது.
இலங்கையில் வெளியிட்ட இடங்களில் 50 வது நாளும் 2 திரையரங்குகளில் 70 வது நாளும் ஓடியது.ஆனால் இந்தியாவில் 25 50 75 நாட்களை கடந்து 100 வது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.காவலன் படம் தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் கூறும் போது காவலன் படத்தால் லாபம் அடைந்தனர் எனக்கூறியுள்ளனர்.ஆரமபத்தில் காவலன் படம் வெளியான போது குறிப்பிட்ட அளவு தியேட்டர்களே கிடைத்தன ஆனால் படம் வெளியாகி தந்த வரவேற்பை பார்த்து பின்பும் அதிகளவான புதிய தியேட்டர்கள் கிடைத்தன.இவ்வாறு ரசிகர்கள் இப்படத்திற்கு ஆதரவு வழங்கி விஜயை வெற்றிப்பாதையில் மீண்டும் தூக்கி வைத்துள்ளனர்.
விஜய் இப்படத்தின் பின் வேலாயுதம் படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார்.காவலன் தியேட்டர் விசிட் மேற்கொண்ட போது காவலன் படத்தில் குத்துப்பாட்டு இல்லை என ரசிகர்கள் விஜயிடம் கூறினர் இதனை கேட்ட விஜய் அடுத்த படத்தில் அக்குறையை நீக்குவதாக கூறினார்.அடுத்து விஜய் வருடத்துக்கு 2 படம் பண்ணப்போவதாகவும் 1கதை அம்சம் உள்ள படம் எனவும் மற்றையது மாசாலா படம் என்க்கூறினார்.அதன் அடிப்படையிலேயே விஜயின் எதிர்கால படங்கள் அமையவுள்ளன.இவ்வருடம் இன்னும் 2படங்களை விஜய் வெளியிட உள்ளார்.வேலாயுதம் நண்பன் பகலவன் பொன்னியின்செல்வன் ஆகியன அடுத்து வெளியாக உள்ள விஜய் படங்களாகும்.

விஜயின் அடுத்த படமான வேலாயுதம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

1 comments:

all the best illayathalapathy

Post a Comment