Thursday, April 7, 2011

விரைவில் வேலாயுதம் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு


வேலாயுதம் படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு மிக விரைவில் சென்னையில் ஆரம்பமாக உள்ளது.சென்னை ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தியாகும்.நீங்களும் நேரடியாக படப்பிடிப்பை கண்டு களிக்க தயாரகுங்கள் எந்த இடத்தில் படப்பிடிப்பு என தெரிந்த பின் உங்களுக்கு அதனை அறியத்தருகிறோம்.மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இப்படத்தில் விஜய் ஜெனிலியா ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் விஜயின் பிறந்த நாளன்று வெளியாக இருக்கிறது.ஜூன் மாதம் 22 ம் திகதி இப்படத்தை வெள்ளித்திரையில் காணலாம் எனக்கூறப்படுகிறது.
இயக்குனர் ராஜா கூறும்போது இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது.அதன் பின் ஒரு பாடல் காட்சியை படமாக்க உள்ளோம் இப்பாடலை வெளிநாட்டில் படமாக்க உள்ளோம் இவ் இறுதிக்கட்டப்படப்பிடிப்பை முடித்த பின் பாடல் காட்சி வெளிநாட்டில் சூட் பண்ணப்படும் என்றார்.
இதை தவிர விஜய் அன்டனி தனது பேஸ்புக்கில் இப்படம் மே மாதம் 31 ம் திகதி முழுமையாக முடிந்து விடும் எனக்கூறியுள்ளார்.படப்பிடிப்பு முடிந்த பின் டப்பிங் வேலைகள் போஸ்புரடெக்ஸன் வேலைகள் முடிய மேமாதம் ஆகி விடும் இதனால் இப்படம் விஜயின் பிறந்த நாளன்று வெளியாகி விடும்.இது விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.

0 comments:

Post a Comment