விஜய் அரசியலுக்கு வருவார் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகிறபோதும் விஜய் அரசியலுக்கு வருவேன் என எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.இப்போது விஜய் வேலாயுதம் நண்பன் என இரு படங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.தற்போது தேர்தல் சூடு பிடித்துள்ளது.விஜய் யாருக்கு ஆதரவாக பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.ஆனால் விஜய் எந்த விதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.ஆரம்பத்தில் விஜய் அ.தி.மு.க விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் எனவும் அவருக்கு என பிரத்தியோகமான பிரச்சார வான் அமைக்கப்படுகின்றது எனவும் கூறப்பட்டது.ஆனால் அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லை.விஜய் அ.தி.மு.க விற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுப்பார் எனக்கூறப்பட்டது.ஆனால் அதுவும் இதுவரை நடக்கவில்லை.ஆயினும் விஜயின் தந்தை அ.தி.மு.க விற்கு ஆதரவு தெரிவிப்பார் விஜய் என கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறினார்.இப்பொழுது தமிழக அரசியலில் தமிழ் சினிமா உலகம் பெரும் ஆதரவை வழங்குகிறது.சரத்குமார் ராதிகா விஜயகாந் விந்தியா சிங்கமுத்து ராதாரவி கார்திக் என பெரும் சினிமா பட்டாளமே அ.தி.மு.க விற்கு ஆதரவை திரட்டி வருகிறது.ஆனால் இதுவரை விஜய் எந்த விதமான கருத்தும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விஜயின் காவலன் திரைப்படத்திற்கு எதிராக ஆளும் தரப்பு பிரச்சினை கொடுத்தது.ஆனால அவற்றை தாண்டி படத்தை வெளியிட்டு விஜய் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அதன் பின் விஜய் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment