Tuesday, April 5, 2011

நன்றி மறந்த ஜெயசீலன்

விஜய் ரசிகர் மன்றத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதனால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன் வெளியேறிவிட்டார்.

அவர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

நடிகர் விஜய் ’’மக்கள் இயக்கம்’’ ஆரம்பித்துள்ளார். இது நாளை அரசியல் கட்சியாக மாறும். அந்த மாற்றம் ரசிகர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது என்று விஜய்யே அறிவித்தார்.

இதையடுத்து விஜய் நடித்த படங்களூக்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இதனால் விஜய் கொந்தளித்தார்.

இந்நிலையில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘’சட்டப்படி குற்றம்’’ படத்தை தயாரித்தார். அப்படத்திற்கும் ஆளும் தரப்பினரால் எதிர்ப்புகள் வந்தது என்று சந்திரசேகர் கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மூன்று முறை சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறது. நானும், விஜய் ரசிகர்களும் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறோம் என்று அறிவித்தார்எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த முடிவு விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலனுக்கு பிடிக்கவில்லை. அவர் திமுக ஆதரவாளர். அதனால் அவர் அதிமுகவை ஆதரிக்க மறுக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால், ஜெயசீலன் அதை மறுத்து வந்தார். எங்கள் தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் செய்வோம் என்று கூறிவந்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று ஜெயசீலன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கே திமுக தலைவர் கருணாநிதி இல்லாததால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

அப்போது அவரை செய்தியாளர்கள் மடக்கினர். செய்தியாளர்களிடம் ஜெயசீலன், ‘’அதிமுகவை ஆதரிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகிவிட்டேன்.

விரைவில் கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைவேன். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். கலைஞர் உத்தரவுக்காக காத்திருக்கிறேன். அவர் உத்தரவு வந்தது பிரச்சார களத்தில் குதிப்பேன்’’ என்று அதிரடியாய் சரவெடி வெடித்தார்

0 comments:

Post a Comment