Thursday, April 14, 2011

நண்பன் பட எடிட்டர் யார்?


சங்கர் மிக விரைவில் நண்பன் பட மூன்றாம் கட்டப்படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.இப்பொழுது படம் இடம்பெறும் லொகேசனை பார்த்து வந்துள்ள சங்கர் தான் எடுக்கும் காட்சி பற்றி டிஸ்கசனில் உள்ளார்.இது முடிந்தவுடன் படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு இடம்பெறும் திகதியை அறிவிக்க உள்ளார்.இப்பொழுது தமிழ் திரையுலகில் பரவி வரும் செய்தி நண்பன் படத்திலிருந்து எடிட்டர் அன்டனி விலகி விட்டார் என்ற செய்தியாகும்.

ஆனால் சங்கரும் அன்டனியும் இது பற்றி எந்தக்கருத்தும் தெரிவிக்கவில்லை.படத்திலிருந்து அன்டனி விலகினாரா இல்லை விலகவில்லையா என்ற விடயம் மிகவும் குழப்பமாக இருந்தது.ஆனால் இன்று நண்பன் பட போஸ்டர் ஒன்று புது வருட விருந்தாக எல்லா இந்திய தமிழ் பத்திரிகைகளிலும் வெளியாகியது .இதில் அன்டனியின் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.எனவே இதுவரை சங்கர் படத்திலுருந்து அன்டனி விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விஜய் இலியானா அனுஜா சிறீகாந் ஜீவா சத்தியராஜ் ராகவா லோரன்ஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க சங்கர் படத்தை இயக்க ஹரிஸின் இசையில் மதன் கார்க்கி நா-முத்துக்குமாரின் வரிகளில் சோபியின் நடன அமைப்பில்  மனோஜ் பரமஹம்சவின் ஒளிப்பதிவில் ஆன்டனியின் எடிட்டிங்கில் ராஜூ ஈஸ்வரனின் தயாரிப்பில் ஜெமினி பிலிம் சார்பில் இப்படம் இவ்வருட தீபாவளிக்கு வர உள்ளது.

0 comments:

Post a Comment