Tuesday, April 5, 2011

வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறதா?



விஜய் படம் பற்றி புதிய புதிய செய்தி வந்த வண்ணமே உள்ளன.விஜய் நடிக்கப்போகும் புதிய படம் பற்றி முன்னனி சினிமா பத்திரிகைகள் புதிய புதிய செய்தி வெளியிடுவது சிலவேளை விஜய் அப்படங்களில் நடிக்கலாம் என ரசிகர் மனதில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.இப்பொழுது என்ன செய்தி விஜய் பற்றி வந்துள்ளது எனப்பார்க்கும் போது விஜய் ஏற்கனவே திருப்பாச்சி சிவகாசி என இரண்டு கிட் படங்களை கொடுத்த பேரரசுவுடன் இணையப்போகிறார் எனக்கூறப்படுகிறது.அதுவும் இவ்வருடம் இணையப்போகிறார்கள் எனக்கூறப்படுகிறது.பேரரசு நிறையகாலம் இயக்கிய திருத்தணி படம் முடிவடைந்த நிலையில் விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகிறார் எனக்கூறப்படுகிறது.சிவகாசிக்கு பிறகு விஜயுடன் இணைவதற்கு பேரரசுவும் முயற்சித்து வருகிறார் அது மீண்டும் நிறைவேறுமா என்பது விஜய் கையில் தான் உள்ளது.பேரரசு இயக்கிய படங்களில் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது திருப்பாச்சி சிவகாசி மட்டுமே பழ்னி  சொல்லிக்கொள்ளும்படி அமைந்தாலும் எனையவே பேரரசுவுக்கு சறுக்கலாயே அமைந்தன.இப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர இருப்பவர் திரிஸா காஜல் அகர்வால் எனப்போடப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் படப்பிடிப்பிடிப்பு தொடங்கவுள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.ஆனால் உத்தியோகபூர்வ அறிவுப்பு எதுவும் எந்ததரப்பில் இருந்தும் வராத வரை இச்செய்தி ரசிகர்களுக்கு ஒரு சுவரஸ்யமான செய்தியாகவே உள்ளது.படத்தின் தலைப்பு ராசிபுரம் என்பதாகும்.விஜய் எப்போது  இது பற்றிக்கூறுவார் பொறுத்திருப்போம் உறுதிப்படுத்துவரை.

0 comments:

Post a Comment