Thursday, April 7, 2011

ஜெய்யின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் சிம்பு


ஜெய்யினது பிறந்த நாள் ஏப்ரல் 6 ம் திகதியாகும்.இந்த முறை பிறந்தநாளன்று ஜெய் சிம்புவுடன் இணைந்து வேட்டைமன்னன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.இப்படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பிண்ணி மில்லில் இடம்பெறுகிறது.
இளையதளபதி விஜயும் வேலாயுதம் பட சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார்.இப்படப்பிடிப்பு செட் போட்டு வேட்டைமன்னன் நடைபெற்ற இடத்தில் இடம்பெற்றது.
ஜெய்யும் சிம்புவும் 7 கமெரா படம்பிடிக்க 60 சண்டைக்கலைஞர்களுடன் சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தனர்.இக்காட்சி படமாக்கப்பட்டபின்னர் சிம்பு திடீரென இன்று ஜெய் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடுவோம் எனக்கூறினார்.
இளையதளபதி விஜயை பிறந்த நாளுக்கு அழைக்க விஜயும் ஜெய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்தார்.பிறந்த நாளை விஜய் ஜெய்க்கு கேக் கொடுத்து கொண்டாடினார்.அனைவரும் கைதட்டி மிகச்சிறப்பாக ஜெய்யின் பிறந்த நாளைக்கொண்டாடினர்.இது ஒரு புது அனுபவமாக ஜெய்க்கு இருந்தது.விஜயின் தம்பியாக இணைந்து பகவதி படத்தில் நடித்த போது படத்திற்காக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.ஆனால் இம்முறை நிஜ பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

1 comments:

good friends all the best your friend ship.

Post a Comment