Saturday, April 30, 2011

ஜெயம் ராஜாவின் பேட்டி


விஜய் நடிப்பில் வெளிவர உள்ள வேலாயுதம் படம் பற்றி ஜெயம் ராஜா கூறும்போது  வேலாயுதம் 90% படப்பிடிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கை முடிவடைந்துள்ளது என்ற  இச்செய்தியை கூறியுள்ளார்.ஜெயம் ராஜா மேலும் கூறும் போது ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு ஒரு சமுதாயத்துக்கு பாடுபடும் மனிதனாக மாறுகின்றான் என்பதே இப்படத்தின் கதை.இதற்கு ஏற்றாற் போல் திரைக்கதை நகர்கிறது.விஜய் படத்தில் இருக்கும் அனைத்து விடயங்களும் இருக்கும் அதை விட சில விடயங்கள் கூடுதலாக இருக்கும் அதனை நீங்கள் திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள் என்றார்.படத்தில் காமெடி சென்டிமென்ட் சண்டை என அனைத்தும் உள்ளது.இரண்டு வொலிவூட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர் என்றார்.அவர்களை படத்தில் நீங்கள் காணலாம்.உலக சினிமா தரத்திற்கு ஏற்றார் போல் பல பல புதிய விடயங்களை சேர்த்துள்ளோம் என்றார்.இதிரைக்கதையை நான் விஜயை மனதில் வைத்து உருவாக்கினேன்.இதனால் படம் இன்னும் சிறப்பாக வந்துள்ளது.இப்படத்தில் வேலை செய்யும் போதே விஜயும் நானும் சேர்ந்து இன்னும் ஒரு படம் பண்ணலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார்.

1 comments:

Post a Comment