Wednesday, April 6, 2011

பகலவன் பரபர செய்தி


விஜய் சீமான் இணையும் படம் பகலவன்.இப்பட பூஜை விரைவில் தொடங்க உள்ளது.விஜயின் வேலாயுதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய் அடுத்து நண்பன் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பில் பங்குகொள்ள உள்ளார்.அப்படப்பிடிப்பு முடிந்த பின் பகலவன் படத்தை தொடங்க உள்ளார்.மிக வேகமான திரைக்கதையுடன் கூடிய பகலவன் மிகவேகமாக தொடங்கி மிக வேகமாக முடிக்க உள்ளார் சீமான்.விஜயின் வேண்டுகோளுக்கிணங்க மிக வேகமாக தொழிற்படுகிறார்.தமிழக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சீமான் அதனை முடித்துக்கொண்டு இப்படத்தை தொடங்க உள்ளார்.இப்படத்தை எடுக்கும் நேரத்தில் எந்த விதமான் அரசியல் பிரச்சனையிலும் ஈடுபடமாட்டேன் எனக்கூறியுள்ளார் சீமான்.இப்படத்தின் தொழினுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியையும் முடித்து விட்ட சீமான் விரைவில் அதனையும் வெளியிட உள்ளார்.இசையமைபாளர் யுவன் எனக்கூறப்படுகிறது.நாயகி சாமிரா ரெட்டி கன்சிகா என இருவரின் பெயர் பரிசோதனையில் உள்ளது.யாருக்கு அதிஸ்டம் அடிக்கப்ப்போகு விரைவில் தெரியவந்துவிடும்.காஜல் அகர்வால் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் இப்பொழுது இவ் நாயகிகளே பகலவன் படத்தில் நடிப்பவர்களின் பெயரில் உள்ளனர்.ஏற்கனவே வேலாயுதத்தில் நடித்த ஹன்சிகா விஜயுடன் நல்ல நண்பியாக உள்ளார்.இதனால் ஹன்சிகாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனினும் சாமிரா விஜய் கூட்டணி இன்னும் இணையாததால் இவருக்கும் சந்தர்ப்பம் உண்டு.விரைவில் யார் என அறிவிக்க உள்ளார் சீமான்.பொறுத்திருப்போம் உத்தியோக அறிவிப்பு வரும் வரை.

0 comments:

Post a Comment