இளையதளபதி விஜயின் படங்களில் வரும் பாடல்களும் மிக முக்கியமாக காண்ப்படுகிறது தமிழ் சினிமாவில்.விஜயினது நடிப்பில் வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தை மிகப்பிரமாண்ட தயாரிப்பாளர் அஸ்கார் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளுக்கு பின் முதன் முதலாக வெளியாகும் படமாக இப்படம் காணபபடுகிறது.
ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் வரும் இப்படத்திற்கு சிறப்பான இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் விஜய் அன்டனி.கோயில் திருவிழா போல் அமைந்த வேகம் கூடிய பாடலாக இப்பாடல் காணபபடுகிறது.இது விஜயின் ஆரம்பப் பாடலாக காணப்படுகிறது இப்படத்தில்.சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது நீங்க என்மேல் வைத்திருக்கிற பாசம் என தொடங்குகிறது இப்பாடல் வரிகள்.இப்பாடல் 6000 நடனக்கலைஞர்களுடன் குத்துப்பாட்டாக படமாக்கப்படுகிறது.இப்பாடல் உடுமலைபேட்டையை அடுத்துள்ள இடத்தில் படமாக்கப்படுகிறது.
இப்படத்தின் முழுச்செலவு 45கோடியாகும் இப்பாடலின் செலவு 1.25 கோடியாகும்.இப்படம் பற்றி பிரமாண்ட தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறும் போது " இப்படம் மிகவும் சிறந்த படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.பாட்ஷா படம் ரஜனிக்கு எவ்வாறு ஒரு மைல் கல்லாக திகழ்ந்ததோ அதை போல் இப்படமும் விஜய்க்கு ஒரு சிறப்பான இடத்தை பெற்றுத்தரும் எனக்கூறினார்.

1 comments:
Very nice to see a tamil site for ilayathalabathy! Please keep it up!
Post a Comment