தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள இசையமைப்பாளர்கள் இந்த வருடம் எந்த நிலையில் உள்ளனர் எனப்பார்ப்போம்.எ.ஆர்.ரகுமான் இந்த வருடம் ஒரு படத்திற்கும் இசையமைக்க மாட்டேன் எனக்கூறியுள்ளார்.அவர் சுற்று பயணங்கள் இசை அல்பம் என இவ்வருடம் முழுவதும் செலவழிப்பதால் அவரது இசையமைப்பில் இவ்வருடம் தமிழில் படம் வெளிவராது என்க்கூறப்படுகிறது.எனினும் இவர் இசையமைத்த சுல்தான் இவ்வருடம் வந்தால் ஒரு படம் தமிழில் ரகுமான் இசையமைப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.விஜய் மணிரத்தினம் இணையும் படத்துக்கு ரகுமான் இசையமைப்பார் எனக்கூறப்படுகிறது.எனினும் அப்படம் வருகிற வருடமே வெளிவர உள்ளது.இது ரகுமான் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமான செய்தியாகும்.
அடுத்து தமிழ் நாட்டின் சிறந்த இசையமைப்பாளராக காணப்படுன் ஹரிஸ் ஜெயராஜுக்கு இந்த வருடம் சிறந்த வருடமாக அமையவுள்ளது.எங்கேயும் காதல் கோ என இரு கிட் பாடலை இதுவரை 2011 இல் கொடுத்த ஹரிஸ் அடுத்து எழாம் அறிவு நண்பன் என இரு மெகா பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கிறார்.நான்கு படங்களுக்கு இசையமைத்தாலும் தரமான பாடல்களை தர உள்ளமை ஹரிஸின் சிறப்பாகும்
அடுத்து அதிக படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் என்ற பெயரைக் கொண்ட யுவனுக்கும் இவ்வருடம் சிறப்பாகும்.ஒரே நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைப்பது யுவனின் இசையமைப்பு திறனாகும்.இதுவரை 2011 இல் வந்த பெரும்பாலான படங்களின் இசையமைப்பாளர் யுவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அவன் இவன் மங்காத்தா ஆதிபகவான் காதால் டூ கல்யாணம் பில்லா 2 இரண்டாம் உலகம் என யுவனின் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
அடுத்து குறிப்பிடத்தக்கவர் விஜய் அன்டனி.இவரின் பாடல்கள் ரசிகர்களை என்றும் ஏமாற்றுவதில்லை சிறப்பான குத்துப்பாடல் சிறந்த மெலடி எனக்கலக்குவபவர் இவரது இசையில் விஜயின் வேலாயுதம் யுவன் யுவதி வந்தான் வென்றான் நரன் என பல படங்கள் இவ்வருடம் வெளிவர உள்ளன.
இவர்களை தவிர சுந்தர் சி பாபு வித்தியாசாகர் தீனா சிறிகாந்த் தேவா இமான் ஜி.வி.பிரகாஸ் மணிசர்மா என ஒரு பெரிய பட்டாள இசையமைப்பாளரின் பாடல்கள் வெளியாகியுள்ளன இவ்வருடத்தில் இன்னும் வெளியாக இருக்கின்றன.இவர்களை தவிர புதிய புதிய இசையமைப்பாளரின் வருகையும் காணப்படுகிறது.
0 comments:
Post a Comment