Saturday, April 9, 2011

சங்கரின் ஸ்பெசல் பேட்டி


‘3 இடியட்ஸ்’ ரீமேக்கான ‘நண்பனி’ன் முதல் இரண்டு செட்யூலை முடித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர். அடுத்த செட்யூலுக்கான பரபரப்பில் இருந்தவரிடம் பேசினோம்.
ரீமேக் படம் பண்ணக்கூடாதுன்னு நினைச்சுட்டிருந்தவன் நான். ஆனா,’3 இடியட்ஸ்’ என்னோட அந்த கட்டுப்பாடை உடைச்ச படம். ‘எந்திரன்’ ஷூட்டிங்கிற்காக பூனே பக்கம் இருக்கிற லோனாவாலா போயிருந்தோம். ஹைவேஸ்ல ஷூட் பண்ண பர்மிஷன் கிடைக்கலை. ரொம்ப நேரம் காத்திருந்து எல்லாரும் டென்ஷன் ஆயிட்டோம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாமேன்னு ‘3 இடியட்ஸ்’ படத்துக்குப் போனோம். போனாலும் மனசு முழுவதும் ஷூட்டிங்லயும் பர்மிஷன் கிடைச்சுருமான்னும் நினைச்சுட்டே இருந்தது. அப்புறம்தான், படம் ஆரம்பிச்சதும் அது கொஞ்சம் கொஞ்சமா என்னை உள்ள இழுத்ததை உணர்ந்தேன். கதை, காமெடி, காட்சிகள்னு அந்த ஃபீல் பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு. அப்பவே எஸ் பிக்சர்ஸ்ல பண்றதுக்கு ரைட்ஸ் வாங்கிடலாமான்னு யோசிச்சேன். ‘எந்திரன்’ல பிசியாயிட்டதால மறந்துட்டேன். இப்ப நானே அதை இயக்குறது ஆச்சர்யமாகத்தான் இருக்கு
தமிழுக்காக மாற்றம் பண்ணியிருக்கீங்களா?
சின்ன சின்ன விஷயங்களை, இப்படி பண்ணினா இன்னும் நல்லாயிருக்கும்னு நினைச்சதை மாற்றியிருக்கோம். மொத்தமா மாத்தினா, கதை மாறிரும். ஒரு பாடலை எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கோம். அதுமட்டுமில்லாம ரிலீசுக்குப் பிறகு இந்தியையும் தமிழையும் ஒப்பிட்டு வேற பார்ப்பாங்க. அதுல இப்படி இருந்தது, இதுல இப்படி இருந்ததுன்னு சொல்வாங்க. அதனால அதிக மாற்றம் பண்ணலை. இந்தி சாயல் இல்லாத படமா பண்ணியிருக்கோம்.
இது பிரண்ட்ஷிப் பற்றிய எமோஷனல் கதை. இதுக்கு அதிகமா டெக்னாலஜி தேவைப்படலை. இருந்தாலும் சின்ன சின்னதா பயன்படுத்தியிருக்கோம். ‘எந்திரன்’ல ஸ்பெஷல் எபெக்ட் பண்ணின பிராங்கி சங்க் இதுக்கும் பண்றார். பாடல் காட்சிகள்ல சி.ஜி பயன்படுத்தறோம்.
ஷாரூக் கானின் ‘ரா.ஒன்’ டிரைலர் எந்திரனை ஞாபகப்படுத்தறதா சொல்றாங்களே?
அந்தப் படமும் சூப்பர் ஹீரோ கதை. நான் ஷாரூக்கிட்ட ‘ரோபோ’ கதையை சொன்னதால ரெண்டுக்கும் தொடர்பு இருக்கும்னு நினைச்சிருக்கலாம். அந்த கதை என்னன்னு எனக்கு தெரியாது. படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும்.
‘எந்திரன்&2’ பற்றிய பேச்சா இருக்குதே?
எல்லோரோட எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கு. ஆனா, ஆசைப்படறது முக்கியமில்லை. முதல்ல நல்ல கதை வேணுமில்லை. இந்தப் படத்தை முடிச்சுட்டு அதைப் பற்றி யோசிக்கணும்.
படத்துல ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்குதே?
ஆமா. அதுக்கு ‘3 இடியட்ஸ்’ டைரக்டர் ராஜ்குமார் ஹிரானிக்குதான் நன்றி சொல்லணும். நிறைய கேரக்டர்கள் இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு முழுமையை கொடுத்திருந்தார் அவர். அதைதான் நானும் ஃபாலோ பண்றேன். ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கும்.
வழக்கமா டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க. இதுல?
இது பிரண்ட்ஷிப் பற்றிய எமோஷனல் கதை. இதுக்கு அதிகமா டெக்னாலஜி தேவைப்படலை. இருந்தாலும் சின்ன சின்னதா பயன்படுத்தியிருக்கோம். ‘எந்திரன்’ல ஸ்பெஷல் எபெக்ட் பண்ணின பிராங்கி சங்க் இதுக்கும் பண்றார். பாடல் காட்சிகள்ல சி.ஜி பயன்படுத்தறோம்.

0 comments:

Post a Comment