” ‘நாடோடிகள்’ படத்துல நடிச்சாலும் நடிச்சீங்க… கிட்டத்தட்ட நாடோடி மாதிரிதான் ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடிட்டு இருக்கீங்களே?”
”ஹ்ம்ம்… ஆமால்ல! ஆனா, ‘நாடோடிகள்’ படத்துக்குப் பிறகு, தமிழில் ரொம்ப நல்ல வாய்ப்புகள் வரவே இல்லையே! ‘சீடன்’ படத்தில்தான் நல்ல ஸ்கோர் பண்ற வாய்ப்பு கிடைச்சது. உடனே கமிட் ஆகிட்டேன். ஒருநாள் ஏ.ஆர். முருகதாஸ் சார் போன் பண்ணி, ‘நான் தயாரிக்கும் படத்தை என் இணை இயக்குநர் டைரக்ட் பண்றார். அதில் நீங்க நடிக்கணும்’னு கேட்டார். ‘ஆஹா’ன்னு உடனே கால்ஷீட் கொடுத்துட்டேன். ‘அங்காடித் தெரு’ மகேஷ§க்கு ஜோடியா ஒரு படத்தில் நடிக்கிறேன். அடுத்து பிரியதர்ஷனிடம் இணை இயக்குநரா இருந்த அஜீத் மேனன் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் படம் இயக்குறார். இந்தியில் மாதவனோடும், தமிழில் விஜய்யோடும் நடிக்கிறேன். கேரியர் கிராஃப் இப்பதான் டிக் அடிக்குதுன்னு தோணுது. உங்க ஆசீர்வாதம்லாம் வேணும்!”
”தமிழ் சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?”
”ஃப்ரெண்ட்ஸா..? நானே நொந்து போய் இருக்கேன். ‘சீடன்’ படத்துக்காக தனுஷ் கூட முதல் நாள் ஷூட்டிங். ரொம்ப அமைதியா இருந்தார். ‘சார், உங்க ‘குட்டி’ படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு’ன்னு சொன்னேன். ‘ஓ.கே. தேங்க்ஸ்’னு மட்டும் சொல்லிட்டு, இன்னும் அமைதி ஆயிட்டார். ஷூட்டிங் டயலாக் இல்லாம மொத்தமா நாங்க பேசிக்கிட்டதே அவ்வளவுதான். கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் ‘பெஸ்ட் தமிழ் கமர்ஷியல் ஹீரோ’ விருது வாங்க வந்திருந்தார் விஜய். அவரைப் பார்த்ததும் எனக்கு பரபரன்னு உற்சாகம் ஆயிடுச்சு. வாலன்டியரா போய்அறிமுகப் படுத்திக்கிட்டு, ‘சார்… நான் உங்க படத் தில் நடிக்கிறேன்’னு சொன்னேன். நிமிர்ந்து பார்த்தவர், ஒரே வார்த்தையில் ‘தேங்க்ஸ்’னு முடிச்சுட்டார். ஏங்க, உங்க ஹீரோஸ்லாம் என்கிட்ட பேசமாட்டேங் குறாங்க. நான் ரொம்ப நல்ல பிள்ளைங்க. என்கிட்ட பேசச் சொல்லுங்க… ப்ளீஸ்!”
நன்றி: ஆவி
0 comments:
Post a Comment