Thursday, February 17, 2011

நண்பனின் நாயகி இலியானா


கேடி படத்தின் மூலம் அறிமுகமான இலியானா கேடி படம் தமிழில் சரியாக ஓடாததால் தமிழில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.அவர் தெலுங்குக்கு சென்று நடித்த படங்கள் அவருக்கு நன்றாக அமைந்ததால் அவர் தெலுங்கில் முன்னணி நாயகியாக திகழ்ந்தார் அதன் பின்பு இலியானா தமிழ்படங்களில் நடிக்கவில்லை.ஆனால் அவரை தமிழுக்கு மீண்டும் கொண்டு வர பல தடவை முயன்றும் முயற்சி கைகூடவில்லை.இப்பொழுது நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் இலியானா.இலியானாவுக்கு தமிழ் தெரியாது எனினும் இப்பொழுது தமிழில் கதைக்க பழகுகிறார்.நண்பன் பட வெளியீட்டின் போது தமிழில் கதைப்பேன் என முடிவெடுத்துள்ளார்.நண்பன் படம் பற்றி கூறும்போது விஜய் எனக்கு பிடித்த நடிகர் அவருடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.சங்கர் படத்தில் நடிப்பது என் கனவு அது நிறைவேறியுள்ளது.மிகவும் நன்றாக இப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கொள்ளை கொள்வேன் எனக்கூறியுள்ளார்.நண்பன் பட முதல் கட்டப்படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது அடுத்த கட்டப்படப்பிடிப்பில் விஜயும் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறியுள்ளார்.இப்பொழுது தெலுங்கு பட இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் உள்ள இலியானா இப்படப்பிடிப்பு முடிந்த பின் நண்பன் பட அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்லவுள்ளார்.

0 comments:

Post a Comment