Monday, February 7, 2011

இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்றான் மித்திரன் பத்திரிகையில் இடம்பெற்ற கேள்வி பதில் பகுதி உங்களுக்காக சினிப்பிரியன் பதில்கள் 06.02.2011 வெளியாகியது

இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்றான் மித்திரன் பத்திரிகையில் இடம்பெற்ற கேள்வி பதில் பகுதி உங்களுக்காக சினிப்பிரியன் பதில்கள் 06.02.2011 வெளியாகியது.
கேள்வி :- இரண்டு மூன்று வருடங்களுக்கு பின் நல்லதொரு திரைப்படத்தை தந்துள்ளார் விஜய் .இளையதளபதியின் முன்னைய படங்கள் தோல்வி அடையக் காரணம் என்ன? நல்ல கதை இல்லாமையா?அசின் இல்லாமையா?
பதில் :- மிக நீண்ட நாட்களின் பின்னர் இணைந்துள்ளீர்கள் விஜய் நடித்த முன்னைய படங்கள் விஜய் ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தின.காவலன் சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது.சித்திக்கின் படம் சோடை போனதில்லை.அசின் முக்கியமில்லை.தமிழக அரசியல் நிலைமை விஜய் படங்களை தோல்வி அடையச்செய்தது.
கேள்வி  :- சினிப்பிரியனே காவலன் ஆடுகளம் சிறுத்தை இளைஞன் இவற்றின் வெற்றி அடிப்படையில் வரிசைப்படுத்துக?
பதில் : - காவலன் முன்னேறுகிறது . ஆடுகளம் சிறுத்தை இளைஞன்
கேள்வி :- சினிப்பிரியனே அஜித்தின் மங்காத்தாவில் திரிஸா சினேகா நீது சந்திரா லட்சுமிராய் ஜக்குலின் ஆகிய நடிகைகள் பட்டாளம் நடிப்பது உண்மையா?
பதில் :- ஏராளமான நடிகைகள் நடிப்பதாகத்தான் செய்தி வெளியாகியுள்ளன.சினிமாப்படமா அழகுராணி போட்டியா பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி : - சினிப்பிரியன் அண்ணா 23.01.2011 அன்று மித்திரன் அட்டைப்படத்தில் விஜயின் படத்தை பிரசுரித்தமைக்கு நன்றி.காவலன் வெற்றிபெறுமா?
பதில் : -காவலன் வெற்றி பெற்று விட்டது.
கேள்வி :- சினிப்பிரியனே சிங்கத்தை சிறுத்தை விரட்டி விட்டதா?
பதில் : - சிங்கத்தை வீழ்த்த சிறுத்தையால் முடியவில்லை.
கேள்வி :- அன்பின் சினித்தம்பி காவலன் எப்படி ? படம் பார்த்துவிடீர்களா?
பதில் :- சூப்பர் பார்த்திட்டேன் பார்த்திடேன்.
கேள்வி :- சினிப்பிரியனே விஜய் அஜித் இருவரும் மாஸ் கீரோக்கள்.விஜய் 50 படங்களில் அஜித் 49 படங்களிலும் நடித்துவிட்டனர்.அதிக வெற்றி படங்களில் நடித்தவர் யார்?
பதில் :- விஜய்
கேள்வி :- அன்பின் சினிப்பிரியனே காவலன் படத்தில் விஜயின் நடிப்பு எப்படி? காவலன் வெற்றி பெறுமா?
பதில் :- சித்திக்கின் கைவண்ணாத்தில் விஜய் பிரகாசிக்கின்றார். காவலன் வெற்றிப்படம்.
 இவ்வாறு கேள்வி பதில் இடம்பெற்றுள்ளது.ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்களையே இங்கு காணலாம்.

1 comments:

thankssssss nanbaaaaaaaaaa....

Post a Comment