Friday, February 11, 2011

விறு விறு வேலாயுதம்

விஜயினுடைய அடுத்தபடமான வேலாயுதம் படப்பிடிப்பு இப்பொழுது பொல்லாச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இப்பொழுது வேலாயுதம் பட பாடல் காட்சி ஒன்று படப்பிடிப்பு பொல்லாச்சியில் இடம்பெறுகிறது.இதில் விஜய் கன்சிகா இருவரும் பங்குபெற்றுகின்றனர்.விஜயின் துடிப்பான நடனத்திற்கு தீனி போடும் பாடலாக இது அமைந்துள்ளது.பல நடனக்கலைஞர்களுடன் கலகலப்பாக இப்பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.
வேலாயுதம் படத்திற்கு விஜய் அன்டனி இசையமைத்துள்ளார்.ஏற்கனவே விஜயுடன் இணைந்து வேட்டைக்காரன் பாடலை கிட்டாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின் மாசி 20 ம் திகதி விஜய் நண்பன் பட சூட்டிங்கிற்கு போக உள்ளார்.இது கோவை ஊட்டி பகுதிகளில் இடம்பெற உள்ளது.
வேலாயும் வேகமான திரைக்கதை கொண்ட குடும்பபாங்கான படமாக அமையவுள்ளது.வேலாயுதம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 2 பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.இப்பாடல் காட்சி இரண்டும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.இது மார்ச் மாதம் நடைபெற உள்ளது.விஜயின் காவலன் சித்திரை வருடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேலாயுதம் ரிலீஸ் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.விரைவில் திகதி உறுதிப்படுத்தப்படும்.

0 comments:

Post a Comment