அஜீத் – விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! ‘மங்காத்தா’ பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம் என்று ரகசியம் காக்கிறார்களாம்!

‘அமிதாப், தர்மேந்திரா சேர்ந்து நடிச்ச ‘ஷோலே’ இந்திய சினிமாவில் மைல்கல். அது மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை. பவர்ஃபுல் ஆக்ஷன் சேருங்க, கலர்ஃபுல் காதல் சேருங்க, சியர்ஃபுல் காமெடி சேருங்க!’ என்று வெங்கட் பிரபுவின் தோள் தட்டி அனுப்பி இருக்கிறார்கள் இருவரும்!
0 comments:
Post a Comment