Sunday, February 6, 2011

இலங்கையில் தொடர்ந்து முதலிடத்தில் காவலன்

இந்த வாரத்துக்குரிய டொப் 10 படங்களை இலங்கை மீடியாக்கள் இன்று வெளியிட்டன . இவற்றில் தொடர்ந்தும் முதலிடத்தில் காவலன் உள்ளது . வசூலில் இன்றும் இலங்கையில் முதலிடத்தில் நிற்பதனாலேயே காவலன் டொப் 10 இல் முதலிடத்தில் உள்ளது.பொங்கல் படங்களே தொடர்ந்து 1 2 3 இடத்தை பிடித்து வருகின்றன . காவலன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் காவலன் வசூலில் வெற்றி பெற்றுள்ளது .காவலனை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இலாபத்தை சம்பாதித்துள்ளனர். இவ் வாரம் வெளியாகிய தூங்காநகரம் யுத்தம்செய் ஆகிய படங்களுக்கு தலா ஒவ்வொரு தியேட்டரே இலங்கை முழுவதும் கிடைத்துள்ளன . ஆடுகளம் 3 தியேட்டர்களில் ஓடியது.இதில் 1 தியேட்டரில் இருந்து படம் எடுக்கப்பட உள்ளது.எனவே 2 திரையரங்குகளில் ஆடுகளம் ஓடும் ஆனால் காவலன் வெளியாகிய அனைத்து தியேட்டர்களிலும் வெற்றி நடைபோடுகிறது.இன்னும் சில தினங்களில் எரினா திரையரங்கில் இருந்து சிறுத்தை தூக்கப்படும் எனக்கூறப்படுகிறது.எனவே வருகிற வாரமும் காவலனே வசூலில் இலங்கையில் முதலிடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


இலங்கையில் ஓடும் படங்களில் நிலவரம்  









0 comments:

Post a Comment