Saturday, February 12, 2011

லண்டனில் நண்பன்

நண்பன் பட வேலைகள் இடைவெளி விடாமல் விரைவாக இடம்பெறுகிறது.இவ்வருட தீபாவளிக்கு படத்தை வெளியிடும் நோக்கில் நண்பன் படவேலைகள் இடம்பெறுகின்றன.முதல் கட்ட படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தி விட்டு வந்த சங்கர் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் கோவாவிலும் நடத்த உள்ளார்.அதற்கு இடையில் சங்கரும் ஹாரிஸ் ஜெயராயும் லண்டன் செல்லவுள்ளனர்.நண்பன் பட பாடல்களை கொம்போஸ் பண்ணுவதற்கு.இதில் 5 பாடல்கள் இடம்பெற உள்ளன.இதில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏனைய 4 பாடலகள் பதிவு செய்வதற்காகவே செல்கின்றனர்.இதில் பதிவு செய்த பாடல் ஹந்தி 3 இடியட்ஸின் ஓல் இஸ் வெல் பாடலை தழுவி அமைந்துள்ளது.ஏனைய பாடல்கள் ஹரிஸின் சொந்த இசையில் வெளிவர உள்ளது.
ஏற்கனவே சங்கரும் ஹரிஸும் இணைந்து அந்நியன் பட பாடல்களை கிட்டாக கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.நண்பன் பட பாடல்கள் சிறப்பாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.விஜயும் ஹரிஸும் இணைவது இதுவே முதன்முறை ஆகும்.ஏற்கனவே உதயா படத்திற்கு ஹரிஸ் பிண்ணணி இசை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவர்கள் வேலாயுதம் படத்தில் இணைய இருந்தனர் அதுவும் இணையமுடியாமல் போனது இப்போது நண்பன் படத்தில் இணைகின்றனர்.

0 comments:

Post a Comment