Thursday, February 10, 2011

“சுறா” விஜய்யின் அரசியல் விளையாட்டு ஆரம்பம்

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படைக்கு கண்டம் தெரிவித்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் வரும் 22ம் தேதி நாகப்பட்டினத்தில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறார்.
நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயகுமார் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியும் செய்து வருகின்றனர். ஜெயக்குமார் மனைவிக்கு கருணாநிதி அரசு வேலை கொடுத்துள்ளார். பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஜெயக்குமார் குடும்பத்தாரை வரும் 22-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரும் உடன் செல்கிறார். விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகின்றனர்.
அதே தினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடக்கின்றது. இதில் விஜய் கலந்துகொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார். இந்த தகவலை நாகை, திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் நாகை வருகின்றனர். மேலும், இதில் விஜயின் தந்தையும், மனைவியும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment