தொடர்ந்து ஐந்து படங்கள் மக்கள், ரசிகர்கள் மற்றும் திரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் அவரின் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பிலோ,வணிகத்திலோ எந்த குறையும் இல்லை. இது எல்லாத்தரப்பையும் சென்றடைந்த ஒரு கதாநாயனுக்கே சாத்தியமாகக் கூடியது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் காவலன் சக்சஸ் ஆகியுள்ளது. எம்ஜியார்,ரஜினிக்கு கிடைத்த அந்த நம்பர்- 1 நாற்காலி அவர்களின் பார்முலாவை உபயோகிக்கும் விஜய்க்கு கிடைக்குமா? ரஜினி நடிக்க வந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அப்பொதைய நம்பர்- - 1 ஆக இருந்த எம்ஜியார், முதல்வராகி விட்டார். காலியான அந்த நாற்காலிக்கு அவருடைய போட்டியாளரான சிவாஜி கணேசன் வர முயற்சிக்கவில்லை. முயன்றாலும் முடிந்திருக்காது. அப்போது ரஜினி, 77ல் 15, 78ல் 20, 70ல் 13 என அசுர வேகத்தில் நடித்து, பல வித்தியாசங்களைக் காட்டி எல்லாத் தரப்பையும் சென்றடைந்து தன் சமகால போட்டியாளர் கமலை ஓவர்டேக் செய்து அந்த நாற்காலியை கைப்பற்றினார்.
ஒரு வாதத்துக்கு,ரஜினி இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 70 வயதை நெருங்கும் வேளையில் திரைத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காலியாகும் அந்த இடத்துக்கு கமல் போட்டி போட போவதில்லை. அப்படியானால் இப்போதிருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் பொடென்ஷியல் கேண்டிடேட் ஆக இருப்பதில் விஜய்யும் ஒருவர். அவரால் அதை அடைய முடியுமா?
ஒரு வாதத்துக்கு,ரஜினி இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 70 வயதை நெருங்கும் வேளையில் திரைத் துறையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காலியாகும் அந்த இடத்துக்கு கமல் போட்டி போட போவதில்லை. அப்படியானால் இப்போதிருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் பொடென்ஷியல் கேண்டிடேட் ஆக இருப்பதில் விஜய்யும் ஒருவர். அவரால் அதை அடைய முடியுமா?
1. எம்ஜியார், ரஜினி இருவருக்கும் சமகால போட்டியாளர்களாக இருந்த சிவாஜி,கமல் இருவருமே பெரும்பாலும் இவர்களைப் போல ஹீரோயிஸ படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. சாதாரணப் பாத்திரங்களிலும் நடித்து வந்தனர். இதனால் நம்பர்- 1 ஐ நிர்ணயிக்கும் பெரும்பாண்மை ரசிகளிடமிருந்து அன்னியமானார்கள். ஆனால் விஜய்யின் போட்டியாளராக கருதப்படும் அஜீத்தும் ஹீரோயிஸ படங்களிலேயே நடித்து வருகிறார். தொடர்ந்து அந்தப் பாதையில் செல்லும்படியாகவே அவரின் தற்போதைய படத் தேர்வுகளும் உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் மாதிரி இயக்குனர்கள் இரண்டு அதிரடி படங்களை அஜீத்துக்கு தந்தால் இந்த ரேஸில் அஜீத் முந்த வாய்ப்புகள் அதிகம்.
2. எம்ஜியார்,ரஜினி காலத்தில் நேரடி போட்டியாளர்களைத் தவிர வீரியமான நடிப்பில் மிளிர்ந்த கதாநாயகர்கள் குறைவு. ஆனால் இப்போது விக்ரம்,சூர்யா என விஜய்க்கு போட்டி நடிகர்கள் இருக்கிறார்கள். விஷால்,தனுஷ்,சிம்பு,கார்த்தி என விஜய் செய்வது போலவே செய்து ரசிகர்களை பங்கு போடவும் இன்னோரு தலைமுறை வந்துவிட்டது. அதனால் வித்தியாசமாக நடிப்பது கட்டாயம்.
3. விஜய்க்கு பெரும்பலமாக சொல்லப்படுவது பாடல் காட்சிகளில் ஆடும் நடனம், மற்றும் குறும்பான நடிப்பு இன்னும் 10 ஆண்டு கழித்து 45 வயதில் அப்போதைய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப ஆட முடியுமா, நடிக்க முடியுமா?.(நடனம் அவருக்கு கைவந்தகலை என்பதால் ஓகே) முன்னெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். இப்போது 10 ஆண்டுகளிலெயே ரசனையில் பெரும் மாற்றம் வந்து விடுகிறது.
4. நல்ல பாடல்கள், காமெடி, முண்ணனி நாயகிகளின் துணை என்ற பார்முலாவுடன் தற்போதைய விஜய் படங்கள் வெளியாகின்றன. சண்டைக் காட்சிகள், பஞ்ச் டயலாக்குடன் (காவலனை தவிர) முடிந்து விடுகிறது. இது ரஜினிக்கு அப்போது கைகொடுத்தது. இப்போது அப்படியில்லை எதார்த்த சினிமாவே வெற்றி பெறுகிறது. 45 வயது வரை இதைப் போன்ற கதை அமைப்புள்ள படங்களிலேயே நடித்து நிலைபெறுவது சாத்தியமா?
5. அமீர்கான் 2000ஆவது ஆண்டு வரை ஷாருக்கை விட வணிக மதிப்பில் பின் தங்கியிருந்தார். ஆனால் அவர் அதன் பின் நடித்த தில் சத்தா ஹை, லகான், மங்கள் பாண்டே, ரங் தே பசந்தி, தாரே ஜமின் பர் போன்ற படங்கள் எல்லாமே ஆப் பீட் தீம்தான். ஆனால் அப்படங்கள் அவருக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையை கொடுத்துள்ளது. ஷாருக்குக்கு இணையான வணிக மதிப்பை அவரும் பெற்றார். கஜினி, 3 இடியட்ஸ் படத்திற்க்கு நடந்த வியாபாரமே இதற்க்கு சாட்சி. இதே போல் இங்கும் மக்கள் மனநிலை மாறிவரும் நிலையில் மெத்தட் ஆக்டிங்கில் கலக்குபவர்களுக்கும் அந்த நாற்க்காலிக்கான வாய்ப்பு பிரகாசமாகிறது.
6. ரசிகர்களை தக்க வைக்க இன்னோரு வழி. அரசியல் வேண்டாம். எம்ஜியார்,ரஜினிக்கு இருந்த வெளிமாநில முத்திரை விஜய்க்கும் உண்டு. அரசியல் என இறங்கினால் பல பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். எனவே அவர் கொடியை காட்டாமல் இருப்பது நல்லது. அதிகளவான குழந்தைகளையும், இளைஞர்களையும் கவர்திருக்கும் நடிகர் என்பதால் அரசியலால் அவற்றை இழக்கக்கூடாது.
முன்பு ரஜினி படத்தை, நன்கு தெரிந்த ஹோட்டலில் கிடைக்கும் உடல்நலத்திற்க்கு கேடு தராத சுவையான சாப்பாடு என்று வர்ணிப்பார்கள். அதுபோல விஜய்யும் எல்லாத் தரப்பும் விரும்பும் வகையிலான டீஸண்டான,ஹிரோயிஸம் குறைவான ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினால் அத்துடன் நடிப்புக்கு தீனிபோடும் கதைகளில் நடித்தால் இப்போதைய ரசிகர்களோடு, பின் கவரும் ரசிகர்களையும் சேர்த்து நம்பர் - 1 இடத்தை அடையலாம்
நமக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் வேண்டாம் இளையதளபதியே போதும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி நடித்தால் இனி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக அடுத்த இளையதளபதி பட்டத்துக்கு எல்லோரும் ஆசைபடுவார்கள்
காவலன் அசத்தல் ஹிட்டுடன் வேலாயுதம்(பஞ்ச் வசனம் இல்லாத ஆக்சன் படம் என ராஜா கூறியுள்ளதால் சந்தோசம்), நண்பன் என வெற்றியை தொடருங்கள்.
காவலன் அசத்தல் ஹிட்டுடன் வேலாயுதம்(பஞ்ச் வசனம் இல்லாத ஆக்சன் படம் என ராஜா கூறியுள்ளதால் சந்தோசம்), நண்பன் என வெற்றியை தொடருங்கள்.
நன்றி: முரளிகண்ணன்
0 comments:
Post a Comment