Wednesday, February 16, 2011

2012 இல் உலகம் அழியுமா? சிறப்புப்பார்வை

பேஸ்புக் நண்பர்களுக்கு நல்ல கருத்தை தரலாம் என எண்ணி இக்கட்டுரையை எழுதுகிறேன்.
இன்று உலகமக்ளிடையே குடிகொண்ட பிரச்சனைகளில் ஒன்றாக காணப்படுவது 2012 இல் உலகம் அழியுமா? என்ற பிரச்சனையாகும்.இவ்வாறு மக்கள் என்னக்காரணம் மாயா இனத்தவருடைய மாயா கலண்டர் என அழைக்கப்படும் கலண்டர் 21.12.2012 உடன் முடிவடைவதே ஆகும்.இக்கலண்டரில் 21.12.2012 வரை இடம்பெற்றுள்ளது.அதன் பின் இடம்பெறவில்லை.இதனால் உலகமும் இத்திகதிக்கு பின்னர் அழிந்து விடும் என்ற கருத்தானது நிலவி வருகிறது.இது உண்மையா இல்லை பொய்யா என்பது பற்றிப்பார்கும் போது பொய் என்றே தோன்றுகிறது ஏனெனில் உலகம் என்றோ ஒரு நாள் அழியும் எனவும் அந்நதநாள் இந்த நாள் எனக்குறிப்பிடப்பவில்லை என இந்து இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.இவர்களின் கருத்துப்ப்டி பார்க்கும் போது உலகம் அழியும் நாள் எப்போதென்று தெரியாது ஆனால் 21.12.2012 இல் உலகம் அழியாது எனகூறுகிறனர்.2012 இல் உலகம் அழியும் தம் மதத்திற்கு சேர்ந்தால் எந்த பிரச்சனையும் வராது எனக்கூறி சில மதங்கள் மக்களாஇ மதம் மாற்றி வருகின்றன.
சிலர் இப்போது நடக்கும் இயற்கை அழிவுகளை உலகம் அழிவிற்கு சான்றாக கூறுகின்றனர் .அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு நில நடுக்கம் எரிமலை வெடிப்பு என்பன இடம்பெறுவது 2012 இல் உலகம் அழியச்சான்று என்கின்றனர்.இது இயற்கை அழிவுகள் மட்டுமே இதற்கு முன் உலகில் இயற்கை அழிவுகள் இடம்பெறவில்லையா ? இடம்பெற்ற வண்ணமே உள்ளன .இலங்கையில் ஏற்பட்ட கடல் கோள் அழிவினாலே இலங்கையில் பிரசித்தம்பெற்ற சைவ ஆலயங்கள் அழிவை எதிர் நோக்கின எனவே இது சான்றாகாது என்றே கூறலாம்.
2012 ருத்ரம் என்ற படம் வெளிவந்தது இது அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட படம் அதில் கூறப்பட்டது உண்மையென மக்கள் நம்புகின்றனர் .அவர்கள் லாபம் சம்பாதிப்பதற்க்கா 200 மில்லியன் செலவில் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டனர்.ஆங்கில படங்கள் ஒன்றை பெரிதாக்கி தமது கற்பனை வளத்துடன் படங்களை தயாரிப்பார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.2012 ருத்ரன் படத்தை 2009 வெளியிட்டு லாபம் சம்பாதித்தார்கள் இப்படத்தை 2013 வெளியிட்டிருந்தால் ரசிகர்களிடம் அடி வாங்கியிருப்பார்கள்.
21.12.2012 இல் எல்லாக்கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரும் எனவும் இதனால் உலகிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என் விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.எனவே இவற்றை வைத்து பார்க்கும் போது உலகம் 2012 இல் அழிவது என்பது பொய்யே என்பது தெரியும்.சிறப்பான வருடமாக 2013 அமையும் என எதிர்பார்ப்போம்.
கருத்து
என்றும் அன்புடன் கிஷோர்

0 comments:

Post a Comment