Tuesday, May 17, 2011

வேலாயுதம் VS மங்காத்தா


விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வேலாயுதம் படம் ஜூன் மாதம் 22 ம் திகதி விஜயின் பிறந்த நாளன்று வெளிவர உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.இப்படத்தில் விஜய் ஹன்சிகா சரண்யா மோகன் ஜெனிலியா சந்தானம் நடிக்கின்றனர்.ஜெயம் ராஜா இயக்க பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கின்றார்.இப்படத்தின் ரெயிலர்கள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.விஜயின் பிறந்த நாள் பரிசாக இப்படத்தை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.விஜயின் படம் வெளிவரும் அதே மாதத்தின் மூன்றாம் வெள்ளிகிழமை அதாவது ஜூன் 17 ம் திகதி அஜித்தின் மங்காத்தா வெளியாகிறது.ஆனால் இப்படம் ஜூலை மாதம் இரண்டாம் கிழமை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இது அஜித்தின் ஐம்பதாவது படமாகும்.இதில் த்ரிஸா லட்சுமிராய் அர்ஜூன் அஞ்சலி ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.வெங்கட்பிரபு இயக்க தயாநிதிஅழகிரி படத்தை தயாரிக்கிறார்.வானம் அழகர்சாமியின் குதிரை படங்களை அடுத்து தயாரிப்பாளர் இப்படத்தை வெளியிடுகிறார்.வேலாயுதம் ஜூனிலும் மங்காத்தா ஜூலையிலும் வந்தால் படங்கள் போட்டிகளை சந்திக்காமல் வரும்.இவ்விரு படங்களினதும் ஆடியோ மிக விரைவில் நடைபெற உள்ளது.இப்படங்களின் ஆடியோ வெளிவர இன்னும் இரு கிழமைகள் ஆகும்.

0 comments:

Post a Comment