Friday, May 20, 2011

அதிருப்தியாளர்கள் எதிர்ப்பு - எஸ்.ஏ. சந்திரசேகரன் விளக்கம்


அதிருப்தியாளர்கள் எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்றது ஏன்? எஸ்.ஏ. சந்திரசேகரன் விளக்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் பதவி ஏற்றதற்கு அதிருப்தி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாளை அவர்கள் அவசரக்கூட்டம் நடத்துகிறார்கள்.
தலைவர் பதவி ஏற்றது ஏன் என்பது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இன்று விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-  
நமது சங்கத்தின் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து சட்டப்படி நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் பதவி காலம் 2012 ஜூலை வரை இருக்கிறது. ஆனாலும் சங்கத்தின் செயல்பாடுகளில் முந்தைய ஆளும் கட்சியின் ஆதிக்கமும் சில டி.வி. சேனல்களின் ஆதிக்கமும் இருந்தது என்பதையும் அதற்கு இசைந்து கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் சங்கத்தில் சிலர் இருந்தார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை. 
பல கூட்டங்களில் இதை எதிர்த்து வாதாடியும் பயன் கிடைக்காததால் சங்க செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தேன்.   நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என் மகன் விஜய் படங்களுக்கு பல இடையூறு ஏற்பட்டதும் அதை நான் தனியாக இருந்து போராடியதும் அனைவரும் அறிந்தது.
சங்கத்தலைவர் ராமநாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் பொறுப்புகளில் இருந்து தற்போது தானாக விலகி விட்டனர். இதனால் விதிப்படி தற்காலிக தலைவராக செயற்குழு என்னை தேர்வு செய்துள்ளது.   சங்கத்தின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும். அதில் அரசியல் சார்பற்ற தயாரிப்பாளர்கள் சிலரை வெளியில் இருந்து முக்கியமான நிர்வாக பதவிகளுக்கு பரிந்துரை செய்தால் சங்கம் வலுப்பெறும். 
அதன் பிறகு இழந்த உரிமைகளை அரசிடம் கேட்டுப் பெறலாம். பொதுக்குழு ஒப்புக் கொள்ளாவிட்டால் முழு நிர்வாகமும் விலகி மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்யலாம். அதை விடுத்து எல்லோரையும் ராஜினாமா செய்ய சொல்வது நீதிபதி முன்பு நடந்த தேர்தலை புறக்கணிப்பது போன்றதாகும். 
எனவே சங்க உறுப்பினர்கள் பொதுக்குழு நடப்பது வரை பொறுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

0 comments:

Post a Comment